ஜெயலலிதாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் தொடர்பு ஏதுமில்லை என சசிகலாவின் வழக்கறிஞர் மணிசங்கர் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தனது இறுதி வாதத்தின்போது தெரிவித்தார்.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக் கின் விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கில் முதல் குற்றவாளி யாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா தரப்பின் இறுதிவாதம் ஏற்கெனவே நிறைவடைந்ததால், 2-ம் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலாவின் வழக்கறிஞர் மணிசங்கர் தனது இறுதிவாதத்தை தொடங்கினார்.
அவர் வாதிடுகையில், ''1991-முதல் 1995-ம் ஆண்டு வரை தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக ரூ 66 கோடி சொத்துக் குவித்ததாக, 1996-ம் ஆண்டு சுப்பிரமணியன் சுவாமி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இவ் வழக்கை விசாரிக்குமாறு தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து விசா ரணை அதிகாரி நல்லம்ம நாயுடு தலைமையில் அமைக்கப்பட்ட குழு இவ்வழக்கை விசாரித்தது. இதனிடையே சென்னை உயர் நீதிமன்றம் 1997-ம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க உத்தரவிட்டது.
காலம் தாழ்த்தவில்லை
கடந்த 2003-ல் சொத்துக் குவிப்பு வழக்கை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண் டும் என திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்கள். அதனைத் தொடர்ந்து வழக்கு, பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
தமிழில் இருந்த வழக்கின் ஆவணங்களை ஆங் கிலத்திற்கு மொழிமாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்றன. 2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இன்றுவரை வழக்கின் விசாரணை தொடர்ந்து நடை பெற்றுவருகிறது.
பெங்களூருக்கு வழக்கை மாற்றியதில் இருந்து 99 அரசு தரப்பு சாட்சிகளின் மறுவிசாரணை, குற்றம் சாட்டப் பட்டவர்களின் விளக்கங்கள் பெறுதல், குறுக்கு விசாரணை, வழக்கில் இணைக்கப்பட்டுள்ள தனியார் நிறுவனங்கள் தொடர் பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இதிலிருந்து இவ்வழக்கின் விசா ரணையை குற்றம் சாட்டப்பட்ட வர்கள் யாரும் காலம் தாழ்த்த வில்லை என்பது தெரியவருகிறது.
ஜெயலலிதாவுக்கு தொடர்பில்லை
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெய லலிதா மற்றும் சசிகலாவும் பல ஆண்டுகளாக தொழில்முறை நண்பர்களாக இருந்ததால் ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி எண்டர்பிரைசஸ் ஆகிய இரு தனியார் நிறுவனங்களில் நேரடி யாக பங்கேற்றனர்.
மற்ற தனியார் நிறுவனங் களில் ஜெயலலிதாவுக்கு நேரடி யாகவோ, மறைமுகமாகவோ தொடர்பில்லை. 1986-ல் சசிகலா 'வினோத் வீடியோ விஷன்' துவங்கியபோதே ஜெ ரியல் எஸ்டேட், ஜெ ஹவுஸிங் டெவலப்பர்ஸ், க்ரீன் ஃபார்ம் ஹவுஸ், நவசக்தி கன்ஸ்ட்ரக்சன், நமச்சிவாயா கன்ஸ்ட்ரக்சன் உள்ளிட்ட 32 தனியார் நிறுவனங்கள் தொடங்கப் பட்டிருக்கின்றன. இதில் சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்ட பலர் பங்குதாரர்களாக இருந் துள்ளனர்.
இந்த நிறுவனங்கள் தொடர்பான பண பரிவர்த்தனைகளில் ஜெயலலிதா நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபட்டதில்லை. தொழில்சார்ந்த பணிகளில் கூட அவர் ஈடுபட்ட தில்லை.
தனியார் நிறுவனங்களுடன் தொடர்புடைய சசிகலாவும் ஜெயலலிதாவும் ஒரே வீட்டில் வசித்ததால், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவையும் குற்றவாளியாக இணைத்திருக் கிறார்கள்.
மற்றபடி அவருக்கும் இவ் வழக்கிற்கும் தொடர்பு ஏதும் இல்லை. எனவே ஜெயலலிதாவை சொத்துக்குவிப்பு வழக்கில் குற்ற வாளியாக நிறுத்துவதில் சிறிதும் நியாயமில்லை'' என்றார் வழக்கறிஞர் மணிசங்கர்.
இதனைத் தொடர்ந்து வெள்ளிக் கிழமையும் சசிகலாவின் வழக் கறிஞரை தொடர்ந்து வாதிடுமாறு நீதிபதி டி'குன்ஹா பணித்தார்.