மும்பை: மும்பையைச் சேர்ந்தவர் பாரத் ஜெயின். ரயில் நிலையம், ஆசாத் மைதானம் பகுதியில் பிச்சை எடுக்கிறார். இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர். ஆரம்பத்தில் ஏழ்மை காரணமாக பிச்சையெடுக்கும் தொழிலில் ஈடுபட்டார்.
முதலில் குறைந்த வருமானம் கிடைத்தாலும் பிறகு அவரின் திறமையால் மாதம் ரூ.60,000 முதல்ரூ.75,000 வரையிலான வருமானத்தை ஈட்டத் தொடங்கினார்.
இந்த வருமானத்தை வைத்து அவர் மும்பையில் இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டை வாங்கினார். இதன் மதிப்பு ரூ.1.2 கோடி. மேலும், தானேயில் இரண்டு கடைகளை வாடகைக்கு விட்டு அதன் மூலம் மாதம் ரூ.30,000 வருமானத்தை பெறுகிறார்.
இவ்வளவு சொத்துகள் இருந்தும் பாரத் ஜெயின், சத்ரபதி சிவாஜி மகராஜ் டெர்மினஸ் ரயில் நிலையம், ஆசாத் மைதானம் உள்ளிட்ட மும்பை வீதிகளில் பிச்சையெடுப்பதை இன்றும் நிறுத்தவில்லை.
பெருந்தன்மை, பச்சாதாபம் கொண்ட பொதுமக்களால் ஜெயின் 10 முதல் 12 மணி நேரத்துக்குள் ரூ.2,000 முதல் ரூ.2,500 வரை சம்பாதித்து விடுகிறார்.