அசாம் மாநிலத்தில் ஆதிவாசி தீவிரவாதிகள், நேற்று தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணடைந்தனர். 
இந்தியா

அசாமில் ஆதிவாசி தீவிரவாதிகள் 1,100 பேர் ஆயுதங்கள் ஒப்படைப்பு

செய்திப்பிரிவு

குவஹாட்டி: அசாம் மாநிலத்தில் ஆதிவாசி தேசிய விடுதலைப்படை, பிர்சா கமாண்டோ படை, சந்தல் புலிப்படை, அசாம் ஆதிவாசி கோப்ரா படை, ஆதிவாசி மக்கள் படை என பல அமைப்புகள் உள்ளன.

அரசுக்கு எதிராக ஆயுதங்களை தூக்கிய இவர்கள் கடந்த 2016-ம் ஆண்டு சண்டை நிறுத்த ஒப்பந்தம் செய்தனர். அப்போது முதல் அவர்கள் சிறப்பு முகாம்களில் வசித்து வருகின்றனர். ஆதிவாசிகளின் மறுவாழ்வை உறுதி செய்ய, மத்திய அசும், அசாம் அரசும் அமைதி ஒப்பந்தம் கொண்டு வந்தன. இதில்ஆதிவாசி அமைப்புகள் கையெழுத்திட்டன. ஆதிவாசி மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக தனி குழு அமைக்கப்பட்டது.

ஆதிவாசி அமைப்புகளைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடையும் விழா நேற்று நடந்தது. இதில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவிடம் ஆதிவாசி அமைப்பைச் சேர்ந்த 1,100 பேர் 300-க்கும் மேற்பட்ட ஆயுதங்களை ஒப்படைத்தனர். இதில் ஏ.கே.ரக துப்பாக்கிகள், இலகு ரக இயந்திர துப்பாக்கிகள் மற்றும் இதர ஆயுதங்கள் இருந்தன. இவற்றில் 200 ஆயுதங்கள் சரணடையும் விழாவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்த விழாவில் ஆதிவாசி நலன் மற்றும் வளர்ச்சிக் குழு நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

SCROLL FOR NEXT