இந்தியா

மக்களை பாதிக்கும் மத்திய பட்ஜெட்: மம்தா குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

மத்திய பட்ஜெட் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது:

சாதரண மக்களின் பார்வையிலிருந்து பார்க்கும்போது, இந்த பட்ஜெட்டில் தொலைநோக்குப் பார்வை, திட்டமிடல், செயல்படுத்துதல் எதுவும் இல்லை. இந்த பட்ஜெட் ஏழைகளை மேம்படுத்தவோ, வளர்ச்சியைத் தூண்டவோ போவதில்லை.

சில்லறை வர்த்தகத்தில் ஏற்கெனவே நேரடி அந்நிய முதலீடு உள்ளது. தற்போது, பாதுகாப்பு, காப்பீடு துறைகளுக்கு விரிவு படுத்தப்பட்டுள்ளது.

மேலும், பொதுத்துறை வங்கிகளில் 49 சதவீத பங்கு விற்பனையும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இவை நாட்டு மக்களை கடுமையாகப் பாதிக்கும். புதிய அரசானது, நேரடி அந்நிய முதலீட்டாளர்களால், நேரடி அந்நிய முதலீட்டுக்காக, நேரடி அந்நிய முதலீட்டாளர்களே நடத்தும் அரசாங்கமாக மாறியுள்ளது.

அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன், மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

ஜவுளித் துறையில் போதுமான திறன் பெற்றிருந்தும், 6 ஜவுளித் தொழிலகத்தொகுதிகளில் (டெக்ஸ்டைல் கிளஸ்டர்) ஒன்று கூட மேற்கு வங்கத்துக்கு அறிவிக்கப்படவில்லை.

நாட்டிலேயே காய்கறி, பழங்களை அதிகமாக உற்பத்தி செய்யும் மேற்கு வங்கத்துக்கு, தோட்டக்கலை பல்கலைக் கழகம் மறுக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT