கம்மம்: தெலங்கானா மாநிலம் கம்மம் நகரில் காங்கிரஸ் சார்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் (கேசிஆர்) பிஆர்எஸ் கட்சி, பாஜகவின் ‘பி’ அணியாக செயல்படுகிறது.
டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கேசிஆரின் மகள் கவிதா சிக்கியுள்ளார். எனவே நரேந்திர மோடி அரசின் பாதுகாப்பை கேசிஆர் கோரி வருகிறார். இதனால் பாஜகவை ஆதரிக்குமாறு கேசிஆருக்கு பிரதமர் மோடி நெருக்குதல் அளித்துள்ளார். எனவே கேசிஆரின் ரிமோட் கன்ட்ரோல் மோடியின் கையில் உள்ளது.
கர்நாடகாவில் பாஜகவுக்கு ஏற்பட்ட நிலைதான் இங்கு பிஆர்எஸ் கட்சிக்கு ஏற்படும். இவ்வாறு ராகுல் பேசினார்.