இந்தியா

மத்திய பட்ஜெட் 2014: பெண் குழந்தைகள் நலத்திட்டத்துக்கு ரூ.100 கோடி

செய்திப்பிரிவு

பெண் குழந்தைகள் நலனைப் பாதுகாக்க சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி.

பெண் குழந்தைகள் மீது சமுதாயத்தில் இருக்கும் வெறுப்புணர்வு குறித்து வருத்தம் தெரிவித்த அருண் ஜேட்லி, அவர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் திட்டம் ஒன்றை அறிவித்து, மத்திய பட்ஜெட்டில் அதற்கு ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளார்.

மேலும், டெல்லியில் மகளிருக்கான நெருக்கடி மேலாண்மை அமைப்பு ஏற்படுத்தப்படும் என்றும், அதற்கான நிதி நிர்பயா நிதியத்திலிருந்து அளிக்கப்படும் என்றார் அருண் ஜேட்லி.

SCROLL FOR NEXT