இந்தியன் ரயில்வே பல்வேறு வகையான பயணிகளுக்கு ரயில் கட்டண சலுகை அளிக்கிறது. அந்த வகையில் விவசாயிகளுக்காகவும் ஒருசில பயணச் சலுகைத் திட்டங்கள் உள்ளன.
மிகச்சிறந்த விவசாய நடைமுறைகள் மற்றும் பால் உற்பத்தி மேம்பாடு குறித்து தேசிய அளவிலான நிறுவனங்கள் நடத்தும் பயிற்சிக்கு 20-க்கும் குறையாத எண்ணிக்கையில் செல்லும் விவசாயிகளுக்கு இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படுகிறது.
அதுபோல 300 கிலோ மீட்டருக்கு அப்பால் நாட்டிலுள்ள நதி பள்ளத்தாக்கு மற்றும் இதர திட்டங்களைப் பார்வையிடவும், வேளாண் பல்கலைக்கழகம், ஆராய்ச்சி நிறுவனங்கள் நடத்தும் தேசிய அளவிலான விவசாய கண்காட்சியைப் பார்வையிடவும் செல்லும் (குறைந்தபட்சம் 20 பேர்) விவசாயிகளுக்கு இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணத்தில் 25 சதவீதம் சலுகை அளிக்கப்படுகிறது.
இந்த கட்டண சலுகையைப் பெறுவதற்கு மாவட்ட வேளாண் அதிகாரி அல்லது வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் விவசாயிகள் சான்று பெற வேண்டும். அத்தகைய சான்றுடன் விண்ணப்பிப்பவர்களுக்கு சலுகை உண்டு.