இந்தியா

உ.பி.யில் பாலியல் வன்கொடுமை செய்து பெண்ணை கொலை செய்த இளைஞரின் வீடு இடிப்பு

செய்திப்பிரிவு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்த இளைஞரின் வீடு இடிக்கப்பட்டது.

உத்தர பிரதேசத்தின் பதேபூர்பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் குஜராத்தில் வசித்துவருகின்றனர். அந்த குடும்பத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணுக்கும் பதேபூர் பகுதியை சேர்ந்த சிக்கந்தர் கானுக்கும் சமூகவலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. தன்னை இந்து என்றும், தனது பெயர் சோனு என்றும் கூறி அந்த பெண்ணுடன் சிக்கந்தர் கான் பழகி வந்தார்.

கடந்த 22-ம் தேதி பதேபூரில் நடைபெற்ற உறவினர் திருமணத்தில் பங்கேற்க குஜராத்தில் இருந்து இளம்பெண் பதேபூருக்கு வந்தார். அப்போது சிக்கந்தர் கான் அந்த பெண்ணை தனிமையான இடத்துக்கு அழைத்துச் சென்றார்.

அப்போது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அவரது தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்தார். போலீஸார் விசாரணையில் பிடிபட்ட சிக்கந்தர் கான் கடந்த 23-ம்தேதி கைது செய்யப்பட்டார்.

இந்த சூழலில் உள்ளூர் வருவாய் துறை அதிகாரிகள், பதேபூரில் உள்ள சிக்கந்தர் கானின்வீட்டை ஆய்வு செய்தனர். அப்போது அரசு இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து நேற்று சிக்கந்தர் கான் வீட்டின் பாதி பகுதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

SCROLL FOR NEXT