இந்தியா

சோனியா அறிவுறுத்தல்: முதல் வரிசையில் அமர்ந்து பட்ஜெட் உரையை கவனித்தார் ராகுல்

செய்திப்பிரிவு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அறிவுறுத்தலின்படி, மக்களவையில் முதல் வரிசையில் அமர்ந்த அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பட்ஜெட் உரையை கூர்ந்து கவனித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையினாலன மத்திய அரசின் முதல் பொது பெட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த பட்ஜெட் உரையின் இடையே, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, 5 நிமிட இடைவேளை எடுத்துக்கொள்ள, சபாநாயகரிடம் அனுமதி கோரினார். அதற்கு அனுமதி அளித்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன், 5 நிமிட இடைவேளிக்கு பின்னர், பட்ஜெட் உரை தொடரும் என்றார்.

இதனைத் தொடர்ந்து அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கைக்கு திரும்பினர். அதுவரையில் வழக்கம் போல, கடைசி வரிசையில் அமர்ந்துகொண்டிருந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தியுடன் இடைவேளைக்கு சென்று வந்த பிறகு,முதல் வரிசையில் அமர்ந்தார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோருக்கு அருகில் அவர் அமர்ந்தார்.

பின்னர் அருண் ஜேட்லியின் பட்ஜெட் உரையைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கிய அவர், அதிலிருந்து குறிப்புகளை எதுத்துக்கொண்டார். ஆரம்பத்தில் சற்று தயக்கத்துடன் காணப்பட்ட ராகுல், பின்னர் உறுதியுடன் தோற்றமளித்தார்.

SCROLL FOR NEXT