இந்தியா

மும்பை தாக்குதல் தீவிரவாதி சஜித் மிர்ரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் திட்டத்துக்கு சீனா முட்டுக்கட்டை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த 2008 நவம்பர் 26-ம் தேதி மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 175 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின் போது, பாகிஸ்தானில் இருந்து, மும்பையில் உள்ள தீவிரவாதிகளுக்கு உத்தரவு பிறப்பித்த நபர் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த சஜித் மிர்.

இதற்கான ஆடியோ ஆதாரங்கள் இந்தியாவிடம் உள்ளன. இதனால் அவரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் திட்டத்தை ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டு வந்தது. இதற்கு இந்தியாவும் ஆதரவு தெரிவித்தது. ஆனால், இந்த திட்டத்துக்கு சீனா முட்டுக்கட்டை போட்டது. மும்பை தாக்குதலின் போது மும்பை தாஜ் ஓட்டலில் உள்ள வெளிநாட்டினரை கொல்ல சஜித் மிர் உத்தரவிட்ட ஆடியோ பதிவை, ஐ.நா கூட்டத்தில் இந்திய வெளியுறவுத் துறை இணை செயலாளர் பிரகாஷ் குப்தா ஒலிக்கச் செய்தார். அதன்பின் அவர் சீனாவை கண்டித்து பேசியதாவது:

தீவிரவாதி சாஜித் மிர்க்குசர்வதே தடை விதிப்பதற்கு வலுவான காரணங்கள் இந்தியாவிடம் உள்ளன. மும்பை தாக்குதல் நடந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகும், அதற்கு காரணமானவர்களை நீதிக்கு முன் கொண்டுவர முடியவில்லை. இதற்கு காரணமான இரட்டை நிலைப்பாடு (சீனா) தவிர்க்கப்பட வேண்டும். தீவிரவாத செயலை எந்தவிதத்திலும் யாரும் நியாயப்படுத்தக்கூடாது. இவ்வாறு பிரகாஷ் குப்தா கூறினார்.

SCROLL FOR NEXT