இந்தியா

பெங்களூருவில் சிலிண்டர் வெடித்ததில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்தது: கர்ப்பிணி உட்பட 6 பேர் பலி

செய்திப்பிரிவு

பெங்களூருவில் சிலிண்டர் வெடித்ததில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்தது. இதில் 6 பேர் பலியாகினர்.

இது குறித்து தீயணைப்புத் துறை தரப்பில், "பெங்களூருவில் உள்ள எஜிபுரா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இதில் மொத்தம் 6 வீடுகள் உள்ளன. இந்நிலையில், இன்று (திங்கள்கிழமை) காலை 6.30 மணியளவில் குடியிருப்பில் இருந்த வீடு ஒன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தது. இதில், அந்தக் கட்டிடம் தரைமட்டமானது. இந்த விபத்தில் ஷ்ரவண் (30) அவரது கர்ப்பிணி மனைவி அஸ்வினி (21), ரவிச்சந்திரன் (48), ஹரிபிரசாத் (19), பவன் கல்யாண் (18) ஆகியோர் பலியாகினர். மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்துக்குள்ளான குடியிருப்பு மிகவும் குறுகலான பகுதியில் அமைந்திருப்பதால் மிகுந்த சிரமத்துக்கு இடையே மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு கர்நாடகா உள்துறை அமைச்சர் ராமலிங்கா ரெட்டி நேரில் சென்று பார்வையிட்டார்.

SCROLL FOR NEXT