இந்தியா

வரி மறுப்பு சத்யாகிரகப் போராட்டம்: பிரகாஷ் ராஜ் பங்கேற்பு

ஆதித்ய கே.பரத்பாஜ்

காந்தியவாதியும் நாடகக் கலைஞருமான பிரசன்னா நடத்தி வரும் கைவினைப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை அகற்றக்கோரும் சாகும் வரை உண்ணா விரதப் போராட்டத்தில் பிரபரல திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ் இணைந்தார்.

வரிமறுப்பு சத்யாகிரகப் போராட்டத்தின் 5-ம் நாளான இன்று பிரகாஷ் ராஜ் தன்னை இணைத்துக் கொண்டார்.

ஊடகவியலாளர்களிடம் பிரகாஷ் ராஜ் கூறியதாவது:

இந்த அரசுதான் மேக் இன் இந்தியா மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்க உறுதி மொழியை அளித்தது. கைவினைப் பொருட்கள் மீதான வரிவிலக்குக் கோரிக்கை சமூக நீதியின் ஓர் அங்கம்.

இவ்வாறு கூறினார் நடிகர் பிரகாஷ் ராஜ்.

SCROLL FOR NEXT