இந்தியா

பட்ஜெட் 2014: அகமதாபாத், லக்னோவில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.100 கோடி

செய்திப்பிரிவு

அகமதாபாத், லக்னோவில் ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின், 2014-15 ஆண்டுக்கான பொதுப் பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார்.

அதில், " அகமதாபாத், லக்னோ ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை மேம்படுத்துவதற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது" என்றார்.

மேலும், 20,000 லட்சத்திற்கும் அதிகமான அளவில் மக்கள் தொகை உள்ள நகரங்களிலும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க பரிந்துரை செய்யப்படும் என்று அறிவித்தார்.

SCROLL FOR NEXT