இந்தியா

டோக்லாம் பகுதியில் சீனப் படைகள் இன்னமும் முகாமிட்டுள்ளன: விமானப் படை தளபதி தகவல்

தினகர் பெர்ரி

டோக்லாம் பகுதியிலிருந்து படைகள் வாபஸ் பெறப்பட்ட பிறகு முதல் அதிகாரபூர்வக் கூற்றாக நாட்டின் விமானப் படை தளபதி தனோவா டோக்லாம் பகுதியில் இன்னமும் சீனப்படைகள் முகாமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

“சீனப் படைகள் சும்பி பள்ளத்தாக்கில் இன்னமும் உள்ளது, கோடைக்கால பயிற்சி நிறைவடைந்தவுடன் அந்தப் படைகள் வாபஸ் பெறப்படும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று செய்தியாளர்களிடம் தனோவா தெரிவித்தார்.

வருடா வருடன் கோடைக்காலத்தில் இப்பகுதியில் சீன துருப்புகள் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஒரேசமயத்தில் இருநாடுகளுக்கு எதிரான போர் சாத்தியம் அல்ல என்று கூறிய தனோவா, போர் விமானங்கள் குறைவாக இருந்தாலும் எந்த அச்சுறுத்தலையும் சமாளிக்கக் கூடிய திறன் உள்ளது என்றார்.

“இருநாடுகளுக்கு எதிராக ஒரே சமயத்தில் போர் என்பது நடப்பு புவிஅரசியல் காலச்சூழலில் சாத்தியமல்ல என்றாலும் எதிரிகளின் திறமையைப் பொறுத்து நம் எதிர்வினை அமையும் நோக்கங்கள் ஒரே இரவில் மாறலாம்” என்றார் தனோவா.

சீனா நம்மிடம் அதனிடம் இருப்பதாகக் காட்டுவது அதனிடம் உண்மையாக கைவசம் இருப்பதல்ல. நம்மிடம் போதுமான அளவு ஆயுதங்கள் உள்ளன. வரும் 2032க்குள் இந்திய விமானப்படை 42 படைகளை பெறும். எந்த எண்ணிக்கையாக இருந்தாலும் நாம் பேசும் நடவடிக்கையை எப்போது வேண்டுமானாலும் செயல்படுத்தும் திறன் உள்ளது என்றார் தனோவா.

SCROLL FOR NEXT