தெலங்கானா மாநிலத்தில், புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, கடந்த 2 மாதத்தில் மட்டும் 80 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தெலங்கானா மாநில எதிர்க்கட்சி தலைவருமான ஜானா ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் ஹைதரா பாத்தில் திங்கள்கிழமை கூறியதா வது: தெலங்கானா மாநில அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறை வேற்ற வேண்டும். விவசாயிகளின் வங்கி கடன் ரத்து குறித்து விரைவில் அறிவிக்க வேண்டும். புதிய அரசு பொறுப்பேற்ற கடந்த 2 மாதத்தில் தெலங்கானாவில் 80 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அரசின் தாமதமான நடவடிக்கையே இதற்குக் காரணம்.
அரசுத்துறைகளில் தற்காலிக ஊழியர் களை பணி நிரந்தரம் செய்யும் பணி உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத் தையும் நிறைவேற்ற வேண்டும்.
சமீபத்தில் ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழக மாண வர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. போலீஸ் தடியடியை கண்டித்த தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி, இப்போது ஆட்சிக்கு வந்தவுடன், மாணவர்கள் மீது தடியடி நடத்தலாமா? கிராமப்புறங்களில் 24 மணி நேரமும் தரமான மின்சாரம் வழங்கும் திட்டத்தை உடனடியாக அமல் படுத்த வேண் டும். இல்லையேல், காங்கி ரஸ் சார்பில், தீவிர போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு ஜானா ரெட்டி கூறினார்.