மத்தியப் பிரதேச தொழில் தேர்வு வாரிய ஊழலுக்குப் பொறுப்பேற்று அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் பதவி விலகவேண்டும், ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இந்தூரில் நிருபர்களிடம் கூறுகையில், “இந்த ஊழலில் அமைச்சர்கள் மற்றும் அவர்களுடன் நெருக்கமானவர்களுக்கு தொடர்பு இருப்பதால், ஊழலுக்கு தார்மிகப் பொறுப்பேற்று, சிவராஜ்சிங் சவுகான் முதல்வர் பதவியில் இருந்து விலகவேண்டும். இவ்வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்.
இந்த ஊழலுக்கு சம்பந்தப்பட்ட வர்கள் பொறுப்பேற்க வேண்டும். விசாரணை வெளிப்படையாக நடைபெறவேண்டும். மேலும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப் படவேண்டும்” என்றார்.
மத்திய அமைச்சர் நிஹால் சந்த் மேக்வாலை குறிப்பிடும் வகையில், “பாலியல் குற்றச்சாட் டுக்கு ஆளான ஒருவர் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள் ளார். பாஜகவின் வார்த்தைகளுக் கும் அதன் நடவடிக்கைகளுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது” என்றார் சிந்தியா.