இந்தியா

நாட்டில் சகோதரத்துவம் தழைத்தோங்க வேண்டும்: பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து

செய்திப்பிரிவு

ரம்ஜான் திருநாளில் அமைதியும், ஒற்றுமையும், சகோதரத்துவமும் தழைத்தோங்கி வளரட்டும் என பிரதமர் நரேந்திர மோடி தனது ரம்ஜான் வாழ்த்துக்களை நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

இன்று உலக இஸ்லாமியர்கள் அனைவரும் ரம்ஜான் திருநாளை கொண்டாடி வருகின்றனர்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ரம்ஜான் வாழ்த்து செய்தியில், ''ரம்ஜான் திருநாள் கொண்டாடும் வேளையில், நாட்டில் உள்ள அனைத்து மக்களும் அமைதி, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்துடன் வளர்ச்சி பெற வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

சோனியா வாழ்த்து:

இதனிடையே காங்கிரஸ் தலைவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT