இந்தியா

பிரதமர் மோடி தேசிய மருத்துவர் தின வாழ்த்து

செய்திப்பிரிவு

தேசிய மருத்துவர் தினமான இன்று மருத்துவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நாட்டின் தலைசிறந்த மருத்துவராக திகழ்ந்த பி.சி ராய், மேற்குவங்க மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சராக இருந்தவர். பிடன் சந்திர ராய் அரசியலில் மட்டுமல்லாது மருத்துவத்துறையில் பணியாற்றி பல்வேறு சாதனைகளை படைத்தவர்.

ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 1-ம் தேதி மருத்துவர்கள் தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. டாக்டர் பி.சி. ராயின் பிறந்த நாள்தான் மருத்துவர்கள் தினம். அவரது இறந்த நாளும் அதுவே!

இந்திய மருத்துவத்துறைக்கு பெருமை தேடி தந்த பிடன் சந்திர ராயின் மருத்துவ சேவையை நினைவுகூற ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ஆம் தேதி தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில்,"ஆரோகியமான இந்தியாவை உருவாக்குவததில் மருத்துவர்களின் பங்கு மிகவும் பெரியது. மருத்துவர்கள் இணைந்து ஆரோகியமான நாட்டை உருவாக்க பாடுபட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT