கோப்புப்படம் 
இந்தியா

Odisha Train Tragedy | 7 பேரின் உடலுக்கு கீழே சிக்கிய தம்பியை காப்பாற்றிய அண்ணன்

செய்திப்பிரிவு

கட்டாக்: ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே பாஹாநாகா பஜார் பகுதியில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒடிசா மாநிலம் போக்ராய் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினரும் சிக்கி உள்ளனர்.

அந்த குடும்பத்தில் 10 வயது சிறுவன் தேபேசிஷ் பத்ரா. ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். தனது தாய், தந்தை, அண்ணனுடன் ரயிலில் கடந்த வெள்ளிக்கிழமை பயணித்தான். பத்ராக் பகுதியில் உள்ள மாமா வீட்டுக்கு அவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போதுதான் பாலசோர் அருகே ரயில் விபத்தில் சிக்கியது.

இதுகுறித்து தேபேசிஷ் பத்ரா கூறியதாவது: பத்ராக் பகுதியில் உள்ள எங்கள் மாமா வீட்டுக்கு ரயிலில் சென்றோம். அங்கிருந்து புரி செல்ல திட்டமிட்டிருந்தோம். கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் தாய், தந்தை, அண்ணனுடன் சென்றேன். பாலசோர் ரயில் நிலையம் தாண்டியதும் திடீரென ரயில் பெட்டி பயங்கர சத்தத்துடன் குலுங்கியது.

அதன்பிறகு நான் மயக்கம் அடைந்துவிட்டேன். என்ன நடந்தது என்று தெரியவில்லை. கண் திறந்து பார்த்தபோது, பயங்கர வலியில் துடித்தேன். என் மீது இறந்தவர்களின் உடல்கள் கிடந்தன. எனது அண்ணன் சுபாசிஷ்தான் (10-ம் வகுப்பு படிக்கிறான்) என்னை காப்பாற்றினான். இவ்வாறு தேபேசிஷ் பத்ரா கூறினான்.

SCROLL FOR NEXT