ரம்பாவின் குடும்பத்தார் ஹைதரா பாத்தில் வசித்து வருகின்றனர். இவரது சகோதரர் ஸ்ரீநிவாஸின் மனைவி பல்லவி, தன்னை ரம்பா உட்பட கணவர் குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக செவ் வாய்க்கிழமை பன்ஜாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்த வழக்கை பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வரு கின்றனர். ஏற்கெனவே ஸ்ரீநிவாஸ் மீது வரதட்சணை வழக்கு ஹைதராபாத் நாம்பள்ளி நீதிமன்றத் தில் நிலுவையில் உள்ளது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல்வேறு மொழிகளில் நடித்த ரம்பா, தொழிலதிபர் இந்திர குமாரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு கனடாவில் வசித்து வருகிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.