பசுக்களின் பயன் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பசுவுடன் செல்பி எடுத்து அனுப்பும் போட்டியை நடத்தும் கோசேவா பரிவார் அமைப்பு அதற்காக புதிய மொபைல் ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்.,சின் துணை அமைப்புகளில் ஒன்றான கோசேவா பரிவார் பசு மாட்டின் பயன் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோமாதாவுடன் செல்பி எடுத்து அனுப்பும் போட்டியை ஆண்டுதோறும் நடத்துகிறது.
இதுகுறித்து அந்த அமைப்பின் மூத்த தலைவர் லலித் அகர்வால் கூறுகையில் ‘‘கோமாதாவுடன் செல்பி எடுத்து அனுப்பும் போட்டியை, 2015-ம் ஆண்டிலும் நடத்தினோம். அப்போது படங்களை, வாட்ஸ் ஆப்பில் அனுப்புமாறு கூறினோம். ஆனால், போட்டியாளர்களை தேர்வு செய்வதில் எங்களுக்கு சில சிக்கல்கள் ஏற்பட்டன.
இதையடுத்து, இந்த ஆண்டு போட்டிக்காக மொபைல் ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளோம். இந்த ஆப் மூலம் படங்களை அனுப்புவுதும் எளிது. தேர்வு செய்வதும் எங்களுக்கு எளிமையாக இருக்கும். இந்த ஆப் மூலம் பொது மக்களிடையே, பசுவின் பயன்பாடு, சிறப்பு குறித்த மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்’’ எனக் கூறினார்.