ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் 
இந்தியா

Odisha Train Accident | ரயில்வே அமைச்சர் பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெரா டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடி அரசின் தவறுகள், நிர்வாக திறமையின்மையால் ஒடிசாவில் ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறும்போது, “கடந்த 1956-ம் ஆண்டு அரியலூரில் ஏற்பட்ட ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று அப்போதைய ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி பதவி விலகினார். கடந்த 1999-ம் ஆண்டு நேரிட்ட ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று அன்றைய ரயில்வே அமைச்சர் நிதிஷ் குமார் பதவி விலகினார். இதேபோல ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும் பதவி விலக வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT