அமித் ஷா மற்றும் இளையாராஜா | கோப்புப்படம் 
இந்தியா

இளையராஜா பிறந்தநாள் | தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த அமைச்சர் அமித் ஷா

செய்திப்பிரிவு

இம்பால்: இசையமைப்பாளர் இளையராஜா பிறந்தநாள் இன்று. அவருக்கு காலை முதலே ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தொலைபேசி வழியே இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் தனது இசையால் எண்ணற்ற ரசிகர்களை கொண்டவர் இளையாராஜா. தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். ‘அன்னக்கிளி’-யில் தொடங்கிய அவரது திரை இசைப் பயணம் சுமார் 1000 திரைப்படங்களுக்கு மேல் சென்றுள்ளது. அண்மையில் வெளியான ‘மாடர்ன் லவ் சென்னை’ வெப் தொடரிலும் அவரது இசை தான்.

கடந்த 1943-ல் பிறந்த அவர் இன்றும் தேனீ போல சுறுசுறுப்புடன் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT