இந்தியா

காவிரியில் தமிழகத்துக்கு 10,000 கன அடி நீர் திற‌ப்பு

செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்புகளில் மழை பெய்வதால் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

கடந்த 25-ம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 9 ஆயிரம் கன அடி நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

க‌பினி அணைக்கு விநாடிக்கு 3 ஆயிரத்து 719 கன அடி நீர் வந்துக் கொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து 6 ஆயிரத்து 85 கன அடி நீர் திறந்துவிட‌ப்பட்டுள்ள‌து.

மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 109.84 அடியாக (மொத்த அடி 124.80) உயர்ந்திருக்கிறது.

அணைக்கு விநாடிக்கு 4 ஆயிரத்து 995 கன அடி நீர் வந்துக்கொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து 7 ஆயிர‌த்து 876 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதில் 3 ஆயிரம் கன அடி நீர் மைசூரு மாவட்ட விவசாயிகளின் பாசனத்துக்காக கால்வாயில் திறக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்தும் தமிழ்நாட்டுக்கு மொத்தமாக விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT