திரிண​மூல் காங்​கிரஸ் எம்​எல்​ஏ​வான ஜாஹிர் ஹொசைன்

 
இந்தியா

மேற்கு வங்க தேர்தலில் போட்டியிடும் 10 கோடீஸ்வர வேட்பாளர்கள் யார்?

செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்க சட்​டப் பேர​வைத் தேர்தலில் பல்​வேறு கட்​சிகளைச் சேர்ந்த வேட்​பாளர்​கள் வேட்​புமனுக்​களு​டன் தங்​களது சொத்து விவரங்​கள் அடங்​கிய பிர​மாணப் பத்​திரங்​களை​யும் தாக்கல் செய்​துள்​ளனர்.

வேட்​புமனு தாக்​கல் செய்​துள்​ளவர்​களில் 10 பேர் கோடீஸ்வர வேட்​பாளர்​களாக உள்​ளனர். அவர்​கள் யார் என்ற விவரம் தற்​போது தெரிய​வந்​துள்​ளது.

ஜனநாயக சீர்​திருத்​தங்​களுக்​கான சங்​கம்​(ஏடிஆர்) இத்​தகவலை தெரிவித்​துள்​ளது. மூர்​ஷி​தா​பாத் மாவட்​டம் ஜாங்​கிபூர் தொகுதி திரிண​மூல் காங்​கிரஸ் எம்​எல்​ஏ​வான ஜாஹிர் ஹொசைன் ரூ.67 கோடி மதிப்​புள்ள சொத்​துகளு​டன் முதலிடத்​தில் இருக்​கிறார்.

          

2-வது இடத்​தில் திரிண​மூல் காங்​கிரஸ் எம்​எல்​ஏ​வான அகமது ஜாவேத் கான் ரூ.32.3 கோடி சொத்​துகளு​டன் உள்​ளார். 3-வது இடத்​தில் திரிண​மூல் காங்​கிரஸின் ஜொரசங்கோ எம்​எல்​ஏ​வான விவேக் குப்தா ரூ.23.1 கோடி சொத்​துகளு​டன் இருக்​கிறார்.

4-ம் இடத்​தில் ஷிப்​பூர் தொகுதி மனோஜ் திவாரி ரூ.20.3 கோடி சொத்​துகளு​ட​னும், 5-வது இடத்​தில் சாகர்​திகி தொகு​தி​யைச் சேர்ந்த பைரோன் பிஸ்​வாஸ் ரூ.20.1 கோடி சொத்​துகளு​ட​னும் உள்​ளனர்.

பாரதீய கோர்க்கா பிரஜாதந்த்​ரிக் மோர்ச்சா கட்​சி​யைச் சேர்ந்த ரூபன் சதா லேப்சா (கலிம்​போங் தொகு​தி) ரூ.18.2 கோடி சொத்​துகளு​டன் 6-வது இடத்​தில் இருக்​கிறார். 7-ம் இடத்​தில் பிரதீப் மஜும்​தார் (ரூ.18.1 கோடி), 8-ம் இடத்​தில் நந்​திதா சவுத்​ரி(ரூ.15.7 கோடி), 9-ம் இடத்​தில் அசோக் குமார் (ரூ.14.7 கோடி), 10-ம் இடத்​தில் துலால் சந்​திர தாஸ்​(ரூ.13.7 கோடி) உள்​ளனர்.

SCROLL FOR NEXT