கோவை அருகே பெரிய தடாகம் பகுதியில் ஒரு வீட்டின் உள்ளே செல்வதற்காக முன்புற கேட்டை லாவகமாக திறந்த காட்டு யானை.

 
சுற்றுச்சூழல்

கோவை அருகே வீட்டின் கேட்டை லாவகமாக திறந்த காட்டு யானை! - வீடியோ வைரல்

செய்திப்பிரிவு

கோவை: கோவை அருகே பெரிய தடாகம் பகுதியில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்ற காட்டு யானை உணவை தேடிவிட்டு, மீண்டும் வெளியே வந்த சிசிடிவி காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அதிக அளவில் வன விலங்குகள் உள்ளன. வனப் பகுதிகளில் இருந்து உணவுதேடி அடிக்கடி வெளியேறும் காட்டு யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து, விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர்ந்து நடந்து வருகிறது.

தோட்டங்களிலும், தோட்டத்து வீடுகளிலும் வைக்கப்பட்டிருக்கும் கால்நடை தீவனங்களை சாப்பிடுவதால் அப்பகுதியினர் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பெரிய தடாகம், அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோயில் சுற்று வட்டாரத்தில் ஒற்றைக் காட்டு யானை சுற்றித்திரிவதால், பக்தர்களும் பொதுமக்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்திருந்தனர்.

நேற்று முன் தினம் அதிகாலை பெரிய தடாகம் - குட்டைவழி செல்லும் சாலையில் சுற்றித்திரிந்த ஒற்றைக் காட்டு யானை, அங்கிருந்த ஒரு வீட்டின் கதவை லாவகமாக திறந்து உள்ளே சென்று சாப்பிடுவதற்கு உணவுப்பொருட்களை தேடியது. ஆனால் அங்கு எதுவும் கிடைக்காததால் சிறிது நேரத்தில் வீட்டிலிருந்து வெளியேறியது.

இது அப்பகுதியில் பொருத்தப் பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT