சுற்றுச்சூழல்

கன்னிகைப்பேர் தனியார் நிறுவனத்தில் இன்று அமோனியா அகற்றும் பணி: முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

செய்திப்பிரிவு

திருவள்ளூர்: அமோனியா வாயுக் கசிவு விபத்து ஏற்​பட்ட கன்​னிகைப்​பேர் தனி​யார் நிறு​வனத்​தில் உள்ள அமோனியா வாயு அகற்​றும் பணி ஜூலை 4-ம் தேதி (இன்​று) தொடங்​கு​கிறது. இப்​பணிக்​கான முன்​னேற்​பாடு​கள் குறித்து நேற்று திரு​வள்​ளூர் ஆட்​சி​யர் கவிதா ஆய்வு செய்​தார்.

திரு​வள்​ளூர் மாவட்​டம், பெரிய​பாளை​யம் அருகே கன்​னிகைப்​பேர் கிராமத்​தில் செயல்​பட்டு வந்த இறால் உள்​ளிட்ட கடல் உணவுப் பொருட்​களை பதப்​படுத்தி வெளி​நாடு​களுக்கு ஏற்​றுமதி செய்​யும் தனி​யார் நிறு​வனத்​தில் கடந்த மாதம் 21-ம் தேதி அமோனியா வாயுக் கசிவு ஏற்​பட்​டது.

இந்த விபத்​தில் பாதிக்​கப்​பட்ட 83 பேரில், ஏற்​கெனவே 17 பெண் தொழிலா​ளர்​கள் உயி​ரிழந்​தனர். இச்​சூழலில், சென்னை ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வந்த ஒடிசா மாநிலத்​தைச் சேர்ந்த அலாதி மஹா​ராணா ஜுவாங்கா (29) என்ற பெண் நேற்று முன்​தினம் இரவு உயி​ரிழந்​தார்.

இந்​நிலை​யில், விபத்து நடந்த நிறு​வனத்​தில் உள்ள அமோனியா வாயுவை பாது​காப்​பான முறை​யில்​ அகற்​றும் பணி இன்​றும், நாளை​யும் நடை​பெற உள்​ளது. இப்​பணிக்​கான முன்​னேற்​பாடு​கள் குறித்து நேற்று திரு​வள்​ளூர் ஆட்​சி​யர் கவி​தா, தனி​யார் நிறு​வனத்​தில் ஆய்வு செய்​தார்.

இந்த ஆய்​வின்போது ஆட்​சி​யர், தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு வீரர்​கள், மெட்​ராஸ் பெர்​டிலைசர்ஸ் லிமிடெட், சென்னை பெட்​ரோலி​யம் கார்ப்​பரேஷன் லிமிடெட் நிறு​வனங்​களின் தொழில்​நுட்ப வல்​லுநர்​கள் ஆகியோரிடம் அமோனியா வாயு அகற்​றும் பணி​யின்​போது மேற்​கொள்​ளப்பட உள்ள பாது​காப்பு அம்​சங்​கள் உள்​ளிட்​டவை குறித்​து கேட்​டறிந்​தார்.

பொது​மக்​கள் அவசர உதவிக்​கு, கட்​டுப்​பாட்டு அறையை 9952590412 என்ற எண் மூலம் தொடர்பு கொள்​ளலாம். இந்த விபத்து தொடர்​பாக தனி​யார் நிறுவன உரிமை​யாளர்​களான ஜோசப் மோகன், ஜோசப் ஜெகன், மேலா​ளர் டேனியல், ஒப்​பந்​த​தா​ரர் சுரேஷ் பிர​பாத் பெரிய​பாளை​யம் போலீ​ஸா​ரால் கைது செய்​யப்​பட்​டு, ஊத்​துக்​கோட்டை ஜே.எம்​.நீ​தி​மன்ற உத்​தர​வுப்​படி, சென்​னை, புழல் சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளனர்.

இதில், ஜோசப் மோகன், ஜோசப் ஜெகன், டேனியல் ஆகிய 3 பேர் பிணை கேட்டு திரு​வள்​ளூர் மாவட்ட முதன்மை மற்​றும் அமர்வு நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தனர். அந்த மனு மீதான விசா​ரணை நேற்று நீதி​மன்​றத்​தில் நடந்​தது.

இதில், ஆஜரான அரசு தரப்பு வழக்​கறிஞர் பி.என்​.உதயகு​மார், அமோனியா வா​யுக் கசி​வால் 18 பேர் உயி​ரிழக்க காரண​மாக இருந்த 3 பேருக்​கும்

பிணை வழங்​கக் கூடாது என்று ஆட்​சேபம் தெரி​வித்​தார். இதையடுத்து மாவட்ட முதன்​மை, அமர்​வு நீதிப​தி ஜூலியட்​ புஷ்​பா 3 பேரின்​ பிணை மனுவை தள்​ளுபடி செய்​து உத்​தரவிட்​டார்​.

SCROLL FOR NEXT