சுற்றுச்சூழல்

அரசு கட்டிடங்கள், கல்வி நிறுவனங்களில் மழைநீர் சேகரிப்பு வசதிகளை மீட்க நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: அரசு மற்​றும் மாநக​ராட்சி கட்​டிடங்​களில் ஏற்​கெனவே அமைக்​கப்​பட்ட மழைநீர் சேகரிப்பு வசதிகளை மீட்​டெடுக்க நட​வடிக்கை எடுக்​கப்​படு​கிறது என்று மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்.சமீரன் தெரி​வித்​துள்​ளார்.

மாநக​ராட்சி சார்​பில் நிலத்​தடி நீர் பாது​காப்பு, மழைநீர் சேகரிப்பு, நீர் ஆதா​ரக் வசதி​களைப் புனரமைத்​தல் தொடர்​பாக மழைநீர் சேகரிப்பு கருத்​தரங்​கம் ரிப்​பன் மாளிகை வளாகத்​தில் நேற்று நடை​பெற்​றது.

இதில் மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்.சமீரன் பேசிய​தாவது: மழைநீர் சேகரிப்பு என்​பது தனிநபரின் பொறுப்​பாக மட்​டும் இல்​லாமல், பொது​மக்​கள், குடி​யிருப்​போர் நலச்​சங்​கங்​கள், கல்வி நிறு​வனங்​கள்.

தொழில் நிறு​வனங்​கள் மற்​றும் தன்​னார்வ அமைப்​பு​களின் ஒருங்​கிணைந்த பங்​களிப்​புடன் ஒரு மாபெரும் மக்​கள் இயக்​க​மாக உரு​வெடுக்க வேண்​டும்.

சென்னை மாநகர், கோடை காலத்​தில் தண்​ணீர் தட்​டுப்​பாடு மற்​றும் பரு​வ​மழை காலத்​தில் நகர்ப்​புற வெள்​ளப் பெருக்​கால் பாதிக்​கப்​படு​கிறது. இன்று சேமிக்​கப்​படும் ஒவ்​வொரு மழைத்​துளி​யும் நாளைய சென்​னை​யின் நீர் பாது​காப்​புக்கு பங்​களிக்​கிறது.

மாநக​ராட்சி சார்​பில், 1,858 மாநக​ராட்சி கட்​டிடங்​கள், 1,013 பூங்​காக்​கள், 87 விளை​யாட்டு மைதானங்​கள், மழைநீர் வடிகால்​களில் 30 மீட்​டர் இடைவெளி​யில் 30 ஆயிரம் இடங்​களில் மழைநீர் சேகரிப்பு வசதிகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

குடி​யிருப்​போர் நலச் சங்​கங்​கள் மற்​றும் உரிமம் பெற்ற நில அளவை​யாளர்​களின் தீவிர பங்​கேற்​புடன், ஏற்​கெனவே உள்ள வசதிகள் தொடர்ந்து செயல்​படுவதை உறுதி செய்​ய​வும், செயலிழந்த அமைப்​பு​களைச் சீரமைக்​கவும், அனைத்​துக் கட்​டிடங்​களி​லும் மழைநீர் சேகரிப்பை ஊக்​கு​விக்​கவும் நட​வடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது.

அனைத்து அரசு கட்டிடங்கள், மாநக​ராட்சி கட்​டிடங்​கள் மற்​றும் கல்வி நிறு​வனங்​களில் முறை​யான பராமரிப்​புடன் கூடிய செயல்​படும் மழைநீர் சேகரிப்பு அமைப்​பு​கள் இருக்க வேண்​டும்.

ஒவ்​வொரு பள்​ளி​யும் நீர் சேமிப்​புக்​கான முன்​மாதி​ரியாக மாற வேண்​டும். ஒவ்​வொரு மாணவரும் மழைநீர் சேகரிப்​புக்​கான தூத​ராகத் திகழ வேண்​டும். மழைநீரை வெறுமனே வெளியேற்​று​வதில் இருந்து மாறி, அதை ஒரு மதிப்​புமிக்க வளமாகச் சேமிக்​கும் நிலைக்கு நாம் நகர வேண்​டும்.

சென்​னைக்​குக் குடிநீர் வழங்​கும் ஏரி​களில் 41 சதவீதம் நீர் இருப்பு உள்​ளது. இன்​னும் மழைக்​காலம் இருக்​கிறது. இன்​னும் ஏரி​களில் நீர் நிரம்ப வாய்ப்ப்​புள்​ளது. இவ்​வாறு அவர் பேசினார்.

இக்​கருத்​தரங்​கத்​தில் மாநக​ராட்சி இணை ஆணை​யாளர் (பணிகள்) செ.சரவணன், சென்னை குடிநீர் வாரிய செயல் இயக்​குநர் என்.ஓ.சுகபுத்ரா, வட்​டார துணை ஆணை​யர்​கள் ஸ்வேதா சுமன், எச்.ஆர்.கவுசிக், அஃதாப் ரசூல், கிரெடாய் நிறு​வனத்​தின் திறன் மேம்​பாட்டு ஆலோ​சகர் ஆர்.ஜெயகுமார் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT