ஏஐ தொழில்நுட்பத்துடன் இயங்கக்கூடிய ரோபோடிக் ஸ்கிம்மர் இயந்திரங்களின் செயல்பாடுகளை பார்வையிட்ட ஆணையர் கவுரவ்குமார்.
மதுரை: மதுரையின் நீர்நிலைகளில் உள்ள கழிவுகள், ஆகாயத் தாமரைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் ஏஐ தொழில் நுட்பத்துடன் இயங்கக்கூடிய 2 ரோபோடிக் ஸ்கிம்மர் நவீன இயந்திரங்களை வாங்கியுள்ளது. இவற்றைக் கொண்டு நீர்நிலைக் கழிவு களை அகற்றும் பணி தொடங்கி யுள்ளது.
மதுரை மாநகராட்சிப் பகுதியில் உள்ள கண்மாய்கள், ஊருணிகள் போதிய பராமரிப்பு இல்லாமல் நீர்வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் நிலத்தடி நீர்மட்டம் மாநகரப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் 1,000 அடிக்கு கீழ் சென்றுள்ளது.
தற்போது மாநகராட்சி எல் லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வண்டியூர் கண்மாய், செல்லூர் கண்மாய், கரிசல் குளம் கண்மாய், ஆனையூர் கண்மாய், நாராயணபுரம் கண்மாய், மாரியம்மன் தெப்பக் குளம் போன்ற நீர்நிலைகள் உள்ளன.
இந்த நீர்நிலைகளை கழிவுப் பொருட்கள் மற்றும் ஆகாயத் தாமரை செடிகள் நிறைந்து சுகாதார சீர்கேட்டுடன் மாநகரின் குப்பைத் தொட்டிகளாக மாறி வருகின்றன. இவைதான் மாநகராட்சியின் நிலத்தடி நீர் மட்டம் உயருவதற்கும், கோடை காலத்தில் மாநகரின் குடிநீர் பற்றாக்குறையை போக்கவும் மிகவும் உதவியாக உள்ளன.
அதனால் பொதுப்பணித் துறை, இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த நீர்நிலைகளை மாநகரின் நலன் கருதி மாநகராட்சி நிர்வாகம், சிஎஸ்ஆர் திட்டத்தின் கீழ் தூர்வார முடிவு செய்தது.
அதன்படி, இந்த கண்மாய்களில் காணப்படும் கழிவுகளையும், ஆகாயத் தாமரைகளையும் அகற்று வதற்கு தற்போது மாநகராட்சி 2 ரோபோடிக் ஸ்கிம்மர் எனும் நவீன இயந்திரங்களை வாங்கி யுள்ளது. இந்த இயந்திரங்கள் சிட்டி பேங்க், ஐஐடிஎம்ஐசி மற்றும் விவிருதி கேபிடல் ஆகிய நிறுவனங்களின் நிதியுதவியுடன் வாங்கப்பட்டுள்ளன. ஒரு இயந் திரத்தின் விலை ரூ.12 லட்சம் ஆகும்.
ரோபோட்டிக் ஸ்கிம்மர் இயந்திரம் செயற்கை நுண்ண றிவு தொழில்நுட்பத்துடன் இயங்கக்கூடிய இயந்திரம். இதில் உள்ள கேமரா மூலம் நீர்நிலைகளில் உள்ள கழிவுகளை கண்டறிந்து அகற்றும் திறன் கொண்டது.
விளை யாட்டுத் துறைகள் மற்றும் பொழுதுபோக்குக்காக பயன்படுத்தப்படும் நீச்சல் குளங்கள், கண்மாய்களில் மிதக்கும் இலைகள், தூசிகள், பூச்சிகள் மற்றும் எண்ணெய் படலங்களை தானாகவே சுத்தம் செய்ய இந்த நவீன ஏஐ இயந்திரம் பயன்படுகிறது.
வண்டியூர் கண்மாயில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியில் ஏஐ ரோபோடிக் ஸ்கிம்மர் இயந்திரம்.
தற்போது இந்த ஏஐ இயந்திரங்களை கொண்டு மாநகராட்சிக்குட்பட்ட நீர்நிலை களை தூர்வாரும் பணி தொடங்கி யுள்ள நிலையில், மாநகராட்சி ஆணையர் கவுரவ்குமார் வண்டியூர் கண்மாயில் நடக்கும் பணிகளை பார்வையிட்டார்.
அப்போது அவர் கண்மாயின் பூங்காவின் முன்புறம் நடை பாதையில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் வாகனங்களை பார்வையிட்டதுடன், அவற்றை உடனடியாக அகற்றுமாறும் அலுவலர்களை அறிவுறுத் தினார். மேலும், பூங்காவின் முன்புறம் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் கண்காணித்து வர அலுவலர்களுக்கு உத்தர விட்டார்.
இந்த ஆய்வின்போது, உதவி ஆணையர் தமிழரசன், செயற்பொறியாளர் அர்ச்சனா, உதவி செயற்பொறியாளர் ஆரோக்கிய சேவியர், உதவி செயற்பொறியாளர் காமராஜ் அவர்கள், சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், இந்த ரோபோட்டிக் இயந்திரங்கள், குளத்தின் நீரில் மிதந்தபடி தானாகவே நகரும் திறன் கொண்டவை.
இயந்திரத்தில் பொருத்தப் பட்டுள்ள சென்சார்கள், நீர்நிலைகளின் காணப்படும் திட்டுகள், பாறைகள், தடைகளைக் கண்டறிந்து, முட்டிக் கொள்ளாமல் தங்களின் திசையை மாற்றிக் கொள் கின்றன.
ரோபோவின் முன்பகுதியில் உள்ள திறப்பு வழியாக நீரின் மேற்பரப்பில் இருக்கும் இலைகள், பூச்சிகள் மற்றும் அழுக்குகள் உள்ளே இழுக்கப்படுகின்றன.
உள்ளே இழுக்கப்படும் குப்பை ரோபோவின் வயிற்றுப் பகுதி யில் இருக்கும் ஒரு சிறிய வலை போன்ற கூடையில் சேகரிக்கப்படுகின்றன. நீர் மட்டும் வடிகட்டப்பட்டு மீண்டும் குளத்துக்குள் வெளியேற்றப் படும், என்றனர்.