சுற்றுச்சூழல்

ஒரு குரங்கை பிடித்தால் மகாராஷ்டிராவில் ரூ.600 பரிசு

செய்திப்பிரிவு

மும்பை: மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் ஆண்டுதோறும் குரங்கு கடியால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர்.

பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருக்கும் பயிர்களுக்கு சேதம் ஏற்படுகிறது. வீடுகளில் உள்ள பொருட்கள், உணவு வகைகளை குரங்குகள் சூறையாடி செல்கின்றன. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண மகாராஷ்டிர அரசின் வனத்துறை புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

"குடியிருப்பு பகுதிகளில் ஒரு குரங்கை பிடித்துக் கொடுத்தால் ரூ.600 பரிசு வழங்கப்படும். வலைகள், கூண்டுகள் உள்ளிட்ட பாதுகாப்பான வழிமுறைகளில் குரங்குகளை பிடிக்க வேண்டும். இவ்வாறு பிடிக்கப்படும் குரங்குகளை வனத்துறை அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று மகாராஷ்டிர வனத்துறை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT