சுற்றுச்சூழல்

நீலகிரியில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்கள்

செய்திப்பிரிவு

கூடலூர்: நீலக்​குறிஞ்சி மலர்​கள் மலை​யெங்​கும் பூத்​துக்​குலுங்கி நீல நிறத்​தில் காட்​சி​யளிப்​ப​தாலேயே நீல​கிரி என்று காரணப்​பெயரை கொண்​டிருக்​கிறது. இங்கு ஆண்​டுக்கு ஒரு​முறை பூக்​கும் குறிஞ்சி முதல் 12, 18 ஆண்​டு​களுக்கு ஒரு​முறை பூக்​கும் குறிஞ்​சி​யினங்​கள் வரை உள்​ளன. வன வளத்​தின் குறி​யீ​டாக குறிஞ்சி மலர்​கள் கருதப்​படு​கின்​றன.

இந்​நிலை​யில், கூடலூர் அரு​கில் உள்ள ஓவேலி பகு​தி​யில் பல ஏக்​கர் பரப்​பள​வில் தற்​போது ஒட்​டுமொத்​த​மாக குறிஞ்சி மலர்​கள் பூத்​துள்​ளன. கண்​களுக்கு எட்​டும் தொலைவு வரை நீலக்கம்​பளம் விரித்​தார் போல் காட்​சி​யளிக்​கும் குறிஞ்சி மலர்​களை நோக்கி தேனீக்​கள் படையெடுத்து வரு​கின்​றன.

பாது​காக்​கப்​பட்ட வனப்​பகுதி என்​ப​தா​லும், யானை​கள் நடமாட்டம் மிகுந்த பகுதி என்​ப​தா​லும் சுற்​றுலாப் பயணி​கள் மற்றும் வெளி​யாட்​களுக்கு அனு​மதி மறுக்​கப்​பட்​டுள்​ளது.

இவை எத்​தனை ஆண்​டு​களுக்கு ஒரு​முறை பூக்​கும் குறிஞ்சி மலர்​கள் என்​பது குறித்து வனத்​துறை​யினர் ஆய்​வு​களை மேற்​கொண்டு வரு​கின்​றனர்.

அதேவேளை​யில், குறிப்​பிட்ட பரு​வத்​தில்​தான் இந்​தப் பகு​தி​யில் பூத்​துள்​ளனவா அல்​லது பரு​வநிலை மாற்​றத்​தின் தாக்​கம் இருக்​கிறதா என்​பது குறித்​தும் ஆய்​வு​களை மேற்கொள்ளவுள்​ளனர்.

SCROLL FOR NEXT