படங்கள்: எஸ்.சத்தியசீலன்

 
சுற்றுச்சூழல்

‘காலநிலை மாற்றத்துக்கான திட்டங்களில் அரசுகள் முதலீடு செய்ய வேண்டும்’

சுற்றுச்சூழல் சர்வதேச மன்ற தலைமை செயல் அதிகாரி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

காலநிலை மாற்றத்துக்கான திட்டங்களில், அரசுகள் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என, சுற்றுச்சூழல் சர்வதேச மன்ற தலைமை செயல் அதிகாரி சந்திர பூஷன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை தரமணியில் உள்ள ஆசிய இதழியல் கல்லூரியின் காலநிலை மாற்ற ஊடக மையம் சார்பில், வளர்ந்து வரும் நாடுகளில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தேவைப்படும் நிதியுதவி, அதை பெறுவ தில் உள்ள சிக்கல்கள் குறித்து விவாதிக்கும் பயிலரங்கம், தர மணியில் நேற்று நடைபெற்றது.

          

இதில் பங்கேற்ற சுற்றுச்சூழல், நிலைத்தன்மை மற்றும் தொழில் நுட்பத்துக்கான சர்வதேச மன்றத் தின் (ஐ-ஃபாரஸ்ட்) தலைமை செயல் அதிகாரி சந்திர பூஷன், காலநிலை மாற்றத்துக்கான நிதியை மறுவடிவமைப்பு செய்தல் குறித்து அவர் பேசியதாவது;

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த வழங்கப்படும் காலநிலை நிதியுதவிக்கு நிலை யான வரையறை எதுவும் இல்லை. இதை பயன்படுத்தி கொண்ட வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளுக்கு ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் காலநிலை நிதியாக வழங்குவதாக உறுதியளித்து, கடந்த ஆண்டு அந்த இலக்கை எட்டிவிட்டதாகவும் அறிவித்தன. ஆனால், அதில் 50 சதவீத நிதி, ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த வெளிநாட்டு மேம்பாட்டு உதவி தொகையின் பெயர் மாற்றமே ஆகும். 30 சதவீதம் மட்டுமே உண்மையான காலநிலை நிதியுதவியாகும்.

உலக வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியஸாக கட்டுப் படுத்த உலகுக்கு ஆண்டுக்கு 6 முதல் 9 ட்ரில்லியன் டாலர்கள் தேவை. ஆனால், 1.9 ட்ரில்லியன் டாலர்கள் மட்டுமே காலநிலை நிதியாக கிடைக்கிறது. இதில் 80 சதவீத நிதி சீனா, வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமே செல்கிறது.

சந்தை லாபத்தை மட்டுமே பார்க்கும், சமூக நீதியை அல்ல. இந்தியாவுக்கு 2070-ம் ஆண்டிற்குள் 'நெட் ஜீரோ' இலக்கை எட்ட அடுத்த 45 ஆண்டுகளுக்கு 22.7 ட்ரில்லியன் டாலர்கள் தேவை. சந்தை மூலம் கிடைக்கும் நிதியை தவிர்த்து. ஒவ்வொரு ஆண்டும் 180 பில்லியன் டாலர்கள் தேவை. எனவே, சந்தை தன் போக்கில் செயல்பட அனுமதித்தால், பணக்கார நாடுகள் மட்டுமே பயன் பெறும். இதை சரி செய்ய லாபம் குறைவான, ஆனால், காலநிலை மாற்றத்துக்கு மிகவும் அவசியமான திட்டங்களில் முதலீடு செய்ய அரசுகள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியர் சி.பி.சந்திர சேகர், மோங்காபே- இந்தியா மூத்த எடிட்டர் குந்தன் பாண்டே, கிளைமேட் ட்ரெண்ட்ஸ் இணை இயக்குனர் அர்ச்சனா சவுத்ரி, தி இந்து பிசினஸ் லைன் கன்சல்டிங் எடிட்டர் எம்.ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT