நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் உறைபனியால் வெண் கம்பளம் போர்த்தியதுபோல காட்சியளித்த புல்வெளி.

 
சுற்றுச்சூழல்

ஊட்டியில் உறைய வைக்கும் உறைபனி!

செய்திப்பிரிவு

ஊட்டி: நீல​கிரி மாவட்​டம் ஊட்டி மற்​றும் குன்​னூரில் நடப்​பாண்டு அதி​கபட்ச பனிப்​பொழிவு உள்​ளது. பல நாட்​களாக இரவு நேர வெப்​பநிலை 0 டிகிரி​யாக நீடித்து வரு​கிறது. சுற்​றுலாப் பயணி​கள் அத்​து​மீறி வனத்​துக்​குள் நுழைய கூடாது என வனத் துறை​யினர் எச்​சரித்​துள்​ளனர்.

ஆண்டு​தோறும் நவம்​பர், டிசம்​பர், ஜனவரி ஆகிய 3 மாதங்​கள் நீல​கிரி​யில் குளிர்​கால சீச​னாகும். ஆனால், கடந்த சில ஆண்​டு​களாக பரு​வநிலை மாற்​றம் காரண​மாக மழை மற்​றும் பனி பாதிப்பு தாமத​மாக ஏற்​படு​கிறது. இந்​நிலை​யில், ஊட்டி மற்​றும் குன்​னூரில் கடந்த 10 நாட்​களுக்​கும் மேலாக உறை பனிப்​பொழிவு ஏற்​பட்டு வரு​கிறது.

அதி​காலை நேரத்​தில் உறை பனிப்​பொழிவு இருக்​கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்​சரிக்கை விடுத்​ததற்கு ஏற்ப நேற்று ஊட்டி மற்​றும் சுற்​று​வட்​டாரப் பகு​தி​களான தலைக்​குந்​தா, காந்​தல் பகு​தி​களில் உறைபனி கொட்​டிக் கிடந்​தது.

ஊட்டி தாவர​வியல் பூங்​கா​வில் மைனஸ் 1 டிகிரி செல்​சி​யஸ் வெப்​பநிலை​யும், தலைக்​குந்தா பகு​தி​யில் மைனஸ் 2 டிகிரி செல்​சி​யஸ் வெப்ப நிலை​யும் பதி​வானது. இதன் காரண​மாக புல்​வெளி​கள் மற்​றும் வாக​னங்​கள் மீது வெள்​ளைக் கம்​பளம் போர்த்​தி​யது​போல உறைபனி படிந்​து, மினி காஷ்மீர்​போல ஊட்டி காட்சி அளிக்​கிறது.

தொடர்ச்​சி​யாக உறைபனி பெய்​வ​தால், தேயிலைச் செடிகள் மற்​றும் பயிர்​கள் கருகி வரு​கின்​றன. உள்​ளூர் மக்​கள் உறைபனி​யால் திண்​டாடி வரும் நிலை​யில், ஊட்​டிக்கு வந்​துள்ள சுற்​றுலாப் பயணி​கள் உறைபனி​யில் உற்​சாக​மாக நடந்து சென்று வீடியோ, செல்பி மற்​றும் புகைப்​படம் எடுத்​துக் கொண்​டாடு​கின்​றனர்.

மேலும், உறைபனி காலநிலையை ரசிக்க, சுற்​றுலாப் பயணி​கள் பலரும் ஊட்​டிக்கு ஆர்​வ​முடன் வரு​கின்​றனர். இதனிடையே, சுற்​றுலாப் பயணி​கள் சிலர் தடையை மீறி அடர்ந்த வனப் பகு​திக்​குள் அத்​து​மீறி நுழைந்து ‘ஹிடன் ஸ்பாட்’ என சமூக வலை​தளங்​களில் பதி​விட்டு வரு​கின்​றனர்.

மேலும், அடர்ந்த வனப்​பகு​திக்​குள் நுழைந்து டிரோன் கேம​ராக்​களை பறக்க விட்டு வீடியோ​வும் பதி​விடு​கின்​றனர். இந்​நிலை​யில், நீல​கிரி வனப் பகு​தி​யில் சுற்​றுலாப் பயணி​கள் அத்​து​மீறி நுழையக்​ கூ​டாது என வனத்​துறை எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

ஊட்​டி​யில் தலைக்குந்தா முதல் பைன் காடு​கள் வரை உள்ள வனப் பகு​தி​யில் அத்​து​மீறி யாரும் நுழையக்​கூ​டாது. வனத்​தில் அத்​து​மீறி ட்ரோன் பயன்​படுத்​தக் கூடாது என்​றும் வனத் துறை​யினர் எச்​சரித்​துள்​ளனர். தடையை மீறு​வோர் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும் என வனத் துறை​யினர் எச்​சரித்​துள்​ளனர்.

SCROLL FOR NEXT