சுற்றுச்சூழல்

தண்ணீர் குடிக்க வந்த போது குண்டேரிப்பள்ளம் அணையில் சேற்றில் சிக்கிய பெண் யானை

செய்திப்பிரிவு

ஈரோடு: குண்​டேரிப்​பள்​ளம் அணை​யில் தண்​ணீர் குடிக்க வந்த பெண் யானை சேற்​றில் சிக்​கிக்​கொண்​டது.

ஈரோடு மாவட்​டம் கோபி அருகே உள்ள குண்​டேரிப்​பள்​ளம் அணைக்கு நேற்று முன்​தினம் இரவு தண்​ணீர் குடிப்​ப​தற்​காக வந்த பெண் யானை, எதிர்​பா​ரா​த​வித​மாக சேற்​றில் சிக்கி கீழே விழுந்​தது. சேற்​றி​லிருந்து வெளி​யேற முடி​யாமல் இரவு முழு​வதும் தவித்​தது.

நேற்று காலை அப்​பகு​தி​யில் ரோந்​துப் பணி​யில் ஈடு​பட்ட வனத்​துறை​யினர், சேற்​றில் சிக்​கி​யிருந்த யானையைக் கண்​டனர். இதையடுத்​து, பொக்​லைன் இயந்​திரத்​தின் உதவி​யுடன் யானையை மீட்க முயன்​ற​னர். ஆனால், அந்த இயந்​திர​மும் சேற்​றில் சிக்​கிக்​கொண்​டது.

இதற்​கிடையே, யானை சோர்​வாகக் காணப்​பட்​ட​தால், அதற்கு முதலுதவி அளிப்​ப​தற்​காக கால்​நடை மருத்​து​வக் குழு​வினர் வரவழைக்​கப்​பட்​டனர். தொடர்ந்​து, யானையை மீட்​கும் பணி​யில் வனத்​துறை​யினர் ஈடு​பட்​டனர்.

SCROLL FOR NEXT