சுற்றுச்சூழல்

சென்னை: மழைநீரை சேகரிக்க மாநகராட்சி சார்பில் ரூ.6.88 கோடியில் 4 குளங்கள் சீரமைப்பு பணி

செய்திப்பிரிவு

சென்னை: மாநகராட்சி சார்​பில் பரு​வ​மழைக் காலங்​களில் கிடைக்​கும் மழைநீரைச் சேகரிக்க ரூ.6.88 கோடி​யில் 4 குளங்​களை சீரமைப்பு பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

இது தொடர்​பாக, சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: பெருநகர சென்னை மாநக​ராட்​சிப் பகு​தி​யில், பருவ மழைக்காலங்​களில் குடி​யிருப்​புப் பகுதி மற்​றும் பொது​மக்​களை வெள்​ளப் பாதிப்​பிலிருந்து பாது​காக்​கும் வகை​யில், மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட பகு​தி​களில் உள்ள ஆறுகள், நீர்​வழிக் கால்​வாய்​கள், குளங்​கள் மற்​றும் ஏரி​களில் தூர்​வாருதல், கரைகளைப் பலப்​படுத்​துதல், தடுப்​புச் சுவர் கட்​டு​தல், தடுப்​புச் சுவர் உயர்த்​திக் கட்​டு​தல் உள்​ளிட்ட பல்​வேறு வெள்​ளத் தடுப்​புப் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

போதிய அளவில் மழைநீர் வடி​கால்​கள் மற்​றும் வண்​டல் வடிகட்​டித் தொட்​டிகள் அமைத்​தல், பரு​வ​மழை​யின்​போது குடி​யிருப்​புப் பகு​தி​களில் மழைநீர் தேங்​கு​வதைத் தடுத்​து, மழை நீரைச் சேமிக்க விளை​யாட்டு மைதானங்​கள், பூங்​காக்​கள் மற்​றும் பொது இடங்​களில் ஜெர்​மன் தொழில்​நுட்​பத்​தில் மழைநீர் சேகரிப்பு கட்​டமைப்​பு​கள் ஏற்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன.

குளங்​களில் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை அகற்றி அதன் கொள்​ளளவை அதி​கரித்​தல், குளத்​தைச் சுற்றி புனரமைப்பு மற்​றும் மேம்​பாட்​டுப் பணி​களைமேற்​கொள்​ளுதல், பூங்​காக்​களில் மழைநீர் உறிஞ்​சும் கட்​டமைப்​பு​களை உரு​வாக்​குதல், புதி​தாக குளங்​கள் அமைத்​தல் உள்​ளிட்ட பணி​களும் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

இதன் ஒரு பகு​தி​யாக, மாதவரம் மண்​டலம் ஆவின் குட்​டை​யில் ரூ.59 லட்​சம் செல​விலும், 25-வது வார்டு பாண்டா குளத்​தில் ரூ.91.60 லட்​சம் மதிப்​பீட்​டிலும், அம்​பத்​தூர் மண்​டலம் மங்​களபுரம் குளத்​தில் ரூ.1.82 கோடி​யிலும், பெருங்​குடி மண்​டலம் 191-வது வார்​டு, ஜலா​வுதீன் பேட்​டை, வண்​ணான் குட்டை குளத்​தில் ரூ.3.56 கோடி​யிலும் புனரமைப்பு மற்​றும் பல்​வேறு மேம்​பாட்​டுப் பணி​கள் மேற்கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

இப்​படி பரு​வ​மழைக் காலங்​களில் இந்த குளங்​களில் அதிக அளவில் மழைநீரைச் சேமித்து சாலைகள், குடி​யிருப்​புப் பகு​தி​களில் மழைநீர்த் தேக்​கத்​தைத் தவிர்ப்​ப​தற்​கும், மழைநீரை நிலத்​தடி​யில் சேமிப்​ப​தற்​கும் சிறப்​பான நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT