சுற்றுச்சூழல்

சதுப்பு நிலத்தில் தடுப்பு சுவர் கட்டினால் பள்ளிக்கரணை பகுதியில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கும்: சவுமியா அன்புமணி கருத்து

செய்திப்பிரிவு

சென்னை: பசுமைத் தாயகம் அமைப்​பின் தலை​வரும், பாமக எம்​எல்​ஏவு​மான சவுமியா அன்​புமணி, பள்ளிக்கரணை சதுப்பு நில பகு​தி​யில் நேற்று ஆய்வு மேற்​கொண்​டார்.

அப்​போது, செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: பள்​ளிக்​கரணை சதுப்பு நிலம் அழிக்​கப்​பட்​டால், அங்​குள்ள பறவை​கள், ஊர்வன வகைகள், நிலநீர் உயி​ரினங்​கள், மீன்​கள், மூலிகைகள், புற்​கள், நீர்​வாழ் தாவரங்​கள், பூச்​சிகள், நுண்​ணுயி​ரி​கள் உள்​ளிட்​டவை அழிவை சந்​திக்​கும். பள்​ளிக்​கரணை சதுப்பு நிலம், தண்​ணீரை தேக்கி வைக்​கும் நிலத்​தடி நீரை சேமிக்க உதவும் வெள்ள நீர் வடி​காலாக பயன்​படு​கிறது. அந்த சதுப்பு நிலத்தை பாது​காக்க வேண்​டியது அவசி​யம்.

ஆனால், தமிழக அரசு அதற்கு மாறாக அங்கு தடுப்​புச் சுவர் கட்​டி, குடி​யிருப்பு பகு​தி​களை வெள்​ளத்​தில் மூழ்​கடிக்​கும் செயலில் ஈடு​பட்டு வரு​கிறது. பள்​ளிக்​கரணை சதுப்பு நிலத்தை பாது​காக்க கான்​கிரீட் போட்டு சுற்​றுச் சுவர் தேவை​யில்​லை.

வேலி மட்​டும் போது​மானது. சதுப்பு நிலங்​களை தமிழக அரசு பாது​காக்க வேண்​டும். ராம் சார் நில​மாக இதனை வரையறை செய்து அறிவிக்கை வெளி​யிட வேண்​டும்.

கடந்த ஆட்​சி​யில் ஊழலுக்காக இத்திட்​டம் கொண்​டு​வரப்​பட்​டிருப்​ப​தாக ​மக்​கள் கூறுகின்றனர். அதில் உண்மை தன்​மையை ஆராய வேண்​டும்.

SCROLL FOR NEXT