மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் கலக்கும் கழிவுநீர்.

 
சுற்றுச்சூழல்

குப்பை, கழிவுநீர் கலப்பால் மாசுபடும் மேட்டுப்பாளையம் பவானி ஆறு

தூய குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய கூட்டு நடவடிக்கை அவசியம்

இரா.கார்த்திகேயன்

கோவை: குப்பை ​கொட்​டு​வது, கழி​வுநீர் கலப்​பது உள்​ளிட்ட காரணங்​களால் மேட்​டுப்​பாளை​யம் பவானி ஆறு நாள்​தோறும் மாசடைந்து வரு​வ​தாக பொது​மக்​கள் குற்​றம்​சாட்​டு​கின்​ற​னர்.

கோவை மாவட்​டம் மேட்டுப்​ பாளை​யத்​தின் அடை​யாள​மாக விளங்​கும் பவானி ஆற்று நீரை கோவை, திருப்​பூர் மாவட்​டங்​களில் பல லட்​சம் மக்​கள் குடிநீருக்​காகப் பயன்​படுத்தி வரு​கின்​ற​னர். இந்​நிலை​யில், ஆற்​றி​லும் அதன் கரையோரப் பகு​தி​களி​லும் அதிக அளவில் குப்பை கொட்​டப்​படு​கிறது.

மேலும், கழி​வுநீரும் ஆற்​றில் கலப்​ப​தால் நீர்​நிலை மாசடைந்து வரு​கிறது. இதனால், ஆற்​றில் இருந்து எடுக்​கப்​படும் குடிநீரின் தரமும் பாதிக்​கப்​படு​வ​தாகக் கூறப்​படு​கிறது. பல ஆண்​டு​களாக நீடிக்​கும் இப்​பிரச்​சினைக்கு இது​வரை நிரந்​தரத் தீர்வு காணப்​பட​வில்​லை.

இதுகுறித்து மேட்​டுப்​பாளை​யம் பகுதி மக்​கள் கூறிய​தாவது: மேட்​டுப்​பாளை​யம் பவானி ஆற்​றில் இருந்து 20-க்​கும் மேற்​பட்ட குடிநீர்த் திட்​டங்​களுக்கு தண்​ணீர் எடுக்​கப்​படு​கிறது. ஆனால், ஆற்​றில் நாள்​தோறும் குப்பை கொட்​டப்​படு​கிறது.

கழி​வு நீரும் கலக்​கிறது. சுற்​றுலாப் பயணி​களின் வரு​கை​யால் ஆற்​றங்​கரைப் பகு​தி​களில் குப்பை அதி​கரித்து வரு​கிறது. இது​போன்ற காரணங்​களால் பவானி ஆறு தொடர்ந்து மாசடைந்து வரு​கிறது. இங்​கிருந்து எடுக்​கப்​படும் குடிநீரைப் பயன்​படுத்​தும் பல லட்​சம் மக்​கள் பாதிக்​கப்​படும் அபா​யம் உள்​ளது.

ஆற்​றுப் பகு​தி​களில் குப்பை மற்​றும் கழி​வு​கள் கொட்​டப்​படு​வ​தால், நீரின் தரம் ஆண்டு​ தோறும் மோசமடைந்து வருகிறது. மாசுக்​கட்​டுப்​பாட்டு வாரி​யம் அவ்​வப்​போது தண்​ணீர் மாதிரி​களைச் சேகரித்து ஆய்வு செய்​தா​லும், குடிநீருக்​கான பிர​தான ஆதா​ர​மாக விளங்​கும் ஆற்றை மாசுப​டா​மல் பாது​காப்​பதே மிகவும் அவசி​யம்.

மேட்​டுப்​பாளை​யம் நகராட்​சி, சம்​பந்​தப்​பட்ட பிற துறை​களு​டன் இணைந்து ஒருங்​கிணைந்த நடவடிக்கை மேற்​கொண்​டால் மட்​டுமே, இந்த ஆற்று நீரை ஆதா​ர​மாகக் கொண்ட குடிநீர்த் திட்​டங்​களின் பயனாளி​களுக்கு எதிர்​காலத்​தில் தூய்​மை​யான குடிநீர் கிடைப்​பதை உறுதி செய்ய முடி​யும். இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​தனர்.

இதுகுறித்து மேட்​டுப்​பாளை​யம் நகராட்சி நிர்​வாகத்​தினர் கூறும்​போது, “மேட்​டுப்​பாளை​யம் - ஊட்டி பிர​தான சாலையில் உள்ள ஓடந்​துறை பாலம் அருகே குப்பை கொட்​டப்​படு​கிறது. இதைத் தடுக்க எச்​சரிக்​கைப் பதாகை​கள் வைக்​கப்​பட்​டுள்​ளன.

அவ்​வப்​போது அபரா​த​மும் விதிக்​கப்​படு​கிறது. இருப்​பினும், சுற்​றுலாப் பயணி​களின் வருகை அதி​க​மாக இருப்​ப​தால், குப்பை கொட்​டு​வதை முழு​மை​யாகக் கட்​டுப்​படுத்​து​வ​தில் சிரமம் நில​வு​கிறது.

இதுதொடர்​பாக பாலப் பகு​தி​யில் நெடுஞ்​சாலைத் துறை​யினர்​தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும். மேலும், பாதாளச் சாக்​கடைத் திட்​ட​மும் முழு​மை​யாகச் செயல்​படுத்​தப்​ப​டாத​தால், ஆற்​றின் பல்​வேறு பகு​தி​களில் கழி​வுநீர்​ கலப்​ப​தைத்​ தடுக்​க முடி​யாத நிலை உள்ளது என்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT