சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று மூடுபனி நிலவியது. தாம்பரம் பெருங்களத்தூர் பகுதிகளில் முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு நிலவிய பனி மூட்டம். | படம்:எம்.முத்துகணேஷ் |

 
சுற்றுச்சூழல்

மோசமான வானிலையால் சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு

வரும் நாட்களில் படிப்படியாக குறையும் என தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மற்​றும் புறநகர் பகுதி​களில் கடந்த ஒரு வார​மாக காற்றுமாசு அதி​கரித்​துள்​ளது. இது வரும் நாட்​களில் குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

தமிழகத்​தின் பல பகுதிகளில் பகல் நேர அதி​கபட்ச வெப்​ப நிலை 36 டிகிரி செல்​சி​யஸ் வரை​யும், இரவு நேரங்​களில் 25 டிகிரிசெல்​சி​யஸ் வரை குறைந்​தும் பதிவாகி வரு​கிறது. இரவு நேரங்​களில் வானம் பெரும்​பாலும் தெளிவாகவும் அதி​காலை நேரங்​களில் பனி மூட்​ட​மாகவும் காணப்​படு​கிறது.

சென்னை மற்​றும் புறநகர் பகுதி​களில் வாகன எண்​ணிக்கை அதி​கம் என்​ப​தால், காற்று மாசுவானுக்குச் சென்று சிதைவடைவது தடைபட்டு, கடந்த ஒரு வார​மாக காற்று மாசு அதி​கரித்​துள்​ளது.

கடந்த 20, 21 தேதி​களில் மோச​மான நிலையை அடைந்​துள்​ளது. காற்​றில் மிதக்​கும் 2.5 மைக்​ரோமீட்​டர் அல்​லது அதற்​கும் குறைவான விட்​டம் கொண்ட மிக நுண்​ணிய திட, திரவத் துகள்​களால் ஏற்​படும் காற்று மாசுபாடு பி.எம்.2.5 எனப்​படு​கிறது.

இந்த வகை மாசின் காற்​றுத்​தரக் குறியீடு சென்​னை​யில் கடந்த 21-ம் தேதி அதி​கபட்​சம் 224 ஆக பதிவாகி​யுள்​ளது. காற்று மாசுவின் அனுமதிக்​கப்​பட்ட தரக்​குறியீடு 100 ஆகும்.

இது​குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்​குநர் வி.ஆர்.துரை கூறும்போது, “கிழக்கு திசை காற்று இப்​போது தடைபட்​டுள்​ளது. இரவு நேர வெப்​பநிலை குறைந்​துள்​ளது. இத​னால் காற்​றில் கலந்​துள்ள மாசு சிதைவடையும் படலம், தரையில் இருந்து 1 கி.மீ. வரை மட்​டுமே உள்​ளது.

அத​னால் மாநகரங்​களில் இயல்​பாக காற்​றில் பறக்​கும் துகள்​கள் சிதைவடை​யாமல், காற்​றில் தங்​கி​விடு​கிறது. இத​னால் காற்று மாசு அதி​க​மாக பதிவாகிறது. 23-ம் தேதி (இன்று) முதல் கிழக்கு திசை காற்று வீசத் தொடங்​கும் என்​ப​தால், காற்று மாசு வரும் நாட்​களில் குறையும்” என்​றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT