சுற்றுச்சூழல்

வண்டலூர், கிண்டி பூங்காக்கள் இன்று திறந்திருக்கும்

செய்திப்பிரிவு

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்கா,கிண்டி சிறுவர் பூங்கா ஆகியவைஇன்று (ஏப்.4) திறந்திருக்கும் என்று வனத்துறை தெரிவித்துள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் 180 வகையான இனங்களை சார்ந்த 2,500 வன உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

சென்னை, புறநகர் பகுதிமக்களுக்கு முக்கிய பொழுதுபோக்கு இடமாகவும் இது திகழ்கிறது. தினமும் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வை யாளர்கள் பூங்காவுக்கு வந்து செல்கின்றனர். விடுமுறை தினங்களில் இந்த எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கும். இதேபோல, கிண்டி சிறுவர் பூங்காவுக்கும் பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

இந்த இரு பூங்காக்களும் வாரந்தோறும் செவ்வாய்க் கிழமைகளில் பராமரிப்புப் பணிகளுக்காக மூடப்படுவது வழக்கம். இன்று மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதனால், வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்காவுக்கு அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் வருவார்கள். எனவே,செவ்வாய்க்கிழமையாக இருந்தாலும், பார்வையாளர்கள் வசதிக்காக பூங்காக்கள் இன்று திறந்திருக்கும் என வனத்துறை அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT