ஓசூர் தேர்ப்பேட்டை பச்சை குளத்தில் மிதக்கும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள். 
சுற்றுச்சூழல்

ஓசூர் தேர்ப்பேட்டை பச்சை குளத்தில் மிதக்கும் கழிவை அகற்ற வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

ஓசூர்: ஓசூர் தேர்ப்பேட்டை பச்சை குளத்தில் நீரில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவை முழுமையாக அகற்றித் தூய்மைப்படுத்த வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஓசூர் மலை மீது உள்ள மரகதாம்பாள் சமேத சந்திரசூடேஸ்வரர் சுவாமி கோயில் மாசித் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. வரும் 7-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி, மலையின் கீழ் உள்ள பச்சை குளத்தில் தெப்ப உற்சவம் வரும் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பச்சை குளம் பகுதி முழுவதும் சுத்தம் செய்யப்பட்டுத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆனால், குளத்து நீரில் மிதக்கும் பிளாஸ்டிக் மதுபாட்டில், டம்ளர், குப்பை கழிவு முழுமையாக அகற்றவில்லை. இதனால், குளத்து நீர் மாசமடைந்து துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே, தெப்ப உற்சவத்துக்கு முன்னர் குளத்து நீரில் மிதக்கும் கழிவுகளை முழுமையாக அகற்றி குளத்தின் புனிதத்தைக் காக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT