சுற்றுச்சூழல்

இது விலங்குகளின் குஸ்தி | கட்டிப் பிடித்துக் காதலா, சண்டையா? - வீடியோ

செய்திப்பிரிவு

பொதுவாக இனப்பெருக்க காலத்திலோ அல்லது தங்களின் ஆளுகைக்கு உட்பட்ட எல்லைகளை குறிக்கும்போதோ விலங்குகள் மோதிக் கொள்வதுண்டு. அப்போதும் அவை தங்களின் இயல்பிலிருந்து மாறுபடுதில்லை. இந்தப் போக்கில் இருந்து கொஞ்சம் வித்தியாசப்பட்டிருக்கிறது கொல்கத்தா ஐஐடி வளாகத்தில் நடந்த இரு விலங்குகளின் சண்டை. அப்படி என்ன வித்தியாசம் என்கிறீர்களா? முதலை போல இருக்கும் இரண்டு பிராணிகள் பின்னங்கால்களில் எழுந்து நின்று கழுத்தைக் கட்டிப் பிடித்து யுத்தம் நடத்துகின்றன.

இப்படி ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை தனது ட்விட்டர் பகிர்ந்துள்ள இந்திய வனப்பணி அதிகாரி சுசாந்த நந்தா, "மோதல்களை சமாளிப்பது எப்படி என்று கற்றுக்கொள்ளுங்கள். கொல்கத்தாவிலுள்ள ஐஐஎம்-ல் எடுக்கப்பட்ட அதிகாலை காட்சி" என்று பதிவிட்டுள்ளார்.

மொத்தமாக 14 விநாடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோ காட்சியில், நீர்நிலைக்கு அருகில் உள்ள நடைபாதை போன்ற இடத்தில் முதலைகள் போல இருக்கும் இரண்டு ஊர்வன கட்டிப்பிடித்து சண்டைபோட்டுக்கொள்கின்றன.பின்னங்கால்களை ஊன்றி, தரையில் நீண்டு பரவிக்கிடக்கும் வால்களால் தங்களை நிலைநிறுத்திக்கொண்டு, ஒன்றின் கழுத்தை மற்றொன்று பிடித்து நெரித்துக் கொண்டு அசல் மல்யுத்த வீரர்களைப் போலவே சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன.

இன்று (புதன்கிழமை) முற்பகல் 11 மணிக்கு பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 13,800 பேர் பார்த்திருக்கிறார்கள். 675 பேர் விரும்பியிருக்கிறார்கள். கட்டிப்பிடித்திருக்கும் விலங்கள் சரியாக தெரியாத நிலையில் அவை முதலைகளா இல்லை மானிட்டர் வகை பல்லிகளா என்று இணையவாசிகளிடம் குழம்பம் இருந்தது.

பயனர் ஒருவர் மானிட்டர் பல்லிகள் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கின்றன என்று கருத்து தெரிவித்துள்ளார். மற்றொரு பயனர். இது முதலை மற்றும் கோமோடா டிராகன்களுக்கிடையேயான சண்டையா யார் வென்றது என்று கேட்டுள்ளார். மூன்றாவது பயனர், பிப்ரவரி மாதம் முடிந்திருக்கலாம், ஆனால், காதல் இன்னும் காற்றில் கலந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார். நான்காமவர் "பூங்காவிற்கு வரும் காதலர்களை இவைகள் காப்பிடியடிக்கின்றனவோ” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT