காற்று மாசு | கோப்புப் படம் 
சுற்றுச்சூழல்

ஆவடி, பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட 24 இடங்களில் காற்று தர கண்காணிப்பு நிலையங்கள்

கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: தமிழகத்தில் கூடுதலாக 24 இடங்களில் காற்று தர கண்காணிப்பு நிலையங்களை அமைக்க தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் தற்போது மொத்தம் 34 இடங்களில் தொடர் காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் (Continuous Ambient Air Quality Monitoring Station) செயல்பாட்டில் உள்ளன. இந்நிலையில், கூடுதலாக 24 இடங்களில் இதுபோன்ற நிலையங்களை அமைக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.

இதன்படி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகர்கோவில், பெரம்பலூர், சிவகங்கை, தென்காசி, தேனி, திருவாரூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், ஆவடி, தாம்பரம், கும்பகோணம், ஈரோடு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர், கிருஷ்ணகிரி, ஆம்பூர், நெய்வேலி, பல்லாவரம், காரைக்குடி, ராஜபாளையம் உள்ளிட்ட 24 இடங்களில் தொடர் காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் அமையவுள்ளன.

இந்தக் காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் மூலம் நிகழ் நேரத்தில் காற்றின் தரத்தை ஆய்வு செய்ய முடியும்.

SCROLL FOR NEXT