சுற்றுச்சூழல்

முதுமலையில் குட்டி யானைகளை பராமரிக்கும் பாகன் தம்பதிக்கு நிதியுதவி

செய்திப்பிரிவு

முதுமலை: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில், 27 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

தாயை விட்டுபிரிந்த ரகு, பொம்மி ஆகிய இரண்டு குட்டி யானைகளை பொம்மன், பெள்ளி தம்பதி பராமரித்து வந்தனர். இவர்களை குறித்து எடுக்கப்பட்ட ஆவணப்படம் ‘தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்’ ஆஸ்கர் போட்டிக்கு தேர்வாகியுள்ளது.

இந்நிலையில், நீலகிரி எம்.பி. ஆ.ராசா, சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் முதுமலை தெப்பக்காடு முகாமுக்கு சென்று, குட்டி யானைகளை பராமரிக்கும் பொம்மன், பெள்ளி தம்பதியை சந்தித்து பாராட்டினர். மேலும், அவர்களுக்கு ரூ.25 ஆயிரம் நிதி வழங்கினர். அப்போது, புலிகள் காப்பக துணை இயக்குநர் வித்யா உட்பட வனத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT