சுற்றுச்சூழல்

திருப்பரங்குன்றம் கண்மாயில் 10 அடி நீள மலைப்பாம்பு

செய்திப்பிரிவு

மதுரை: வைகை அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் நிரம்பியுள்ளது. விளாச்சேரி, முனியாண்டிபுரம் பகுதியைச் சேர்ந்த சிலர் கண்மாயில் தினமும் வலைகளை விரித்து மீன் பிடிக்கின்றனர்.

நேற்று முன்தினம் மாலை மீன்பிடிக்க கண்மாய்க்குள் வலைகளை விரித்து வைத்தனர். நேற்று காலை வலையில் சிக்கிய மீன்களை ஒருவர் எடுக்க, வலையை மேல்நோக்கி இழுத்தார். வலைக்குள் சுமார் 10 அடி நீள மலைப்பாம்பு சிக்கியிருந்தது.

இதனைத் தொடர்ந்து பாம்பு பிடிப்பதில் அனுபவமுள்ள சகாதேவன் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வலையிலிருந்த மலைப்பாம்பை பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். நாகமலை புதுக்கோட்டை வனப்பகுதியில் அந்த பாம்பு விடப்பட்டது.

SCROLL FOR NEXT