உரிகம் அருகே உன்சேபச்சிகொல்லை சரகப் பகுதியில் யானைகளுக்குள் ஏற்பட்ட மோதலில், இறந்த பெண் யானை 
சுற்றுச்சூழல்

உரிகம் | யானைகளுக்கு இடையே மோதல் - பெண் யானை உயிரிழப்பு

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: உரிகம் அருகே யானைகளுக்கு இடையே நடந்த மோதலில் காயமடைந்த பெண் யானை இறந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டம் காவேரி தெற்கு வன உயிரின சரணாலயத்தில் உரிகம் வனச்சரகம் உள்ளது. உரிகம் காப்புக் காட்டில் உன்சேபச்சிகொல்லை சரக பகுதியில் வன ஊழியர்கள் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அங்கு பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது.

இதையடுத்து, வனக் கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயினி, தருமபுரி மண்டல வனப் பாதுகாவலர் பெரியசாமி உள்ளிட்டோர் நிகழ்விடத்துக்கு வந்து இறந்த யானையை பார்வையிட்டனர். பின்னர், யானைக்கு உடற்கூறாய்வு நடந்தது.

அதில், யானைக்கு 36 முதல் 38 வயது இருக்கலாம் எனவும், யானையின் உடலில் காயங்கள் இருந்ததும் தெரிய வந்தது. மேலும் யானைகளுக்கு இடையே மோதல் நடந்துள்ளதும், இதில் இந்த பெண் யானை காயமடைந்து உயிரிழந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து யானையின் உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT