சுற்றுச்சூழல்

இந்திய கடல் பகுதிகள் சுற்றுச்சூழல் பன்முகத்தன்மைக் கொண்டவை: மத்திய அமைச்சர்

செய்திப்பிரிவு

புவனேஸ்வர்: இந்தியாவில் நிலையான கடல்சார் மேலாண்மை குறித்த முதலாவது தேசிய மாநாட்டை ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர் பூபேந்தர் யாதவ் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

கடலோர மற்றும் கடல்சார் உயிரினம், பருவநிலை தணிப்பு, இசைவாக்கம், கடல்சார் மாசு ஆகிய மூன்று ஒருங்கிணைந்த கருப்பொருட்களில் கவனம் செலுத்துவதற்காக இந்தியாவின் 13 கடலோர மாநிலங்களின் அதிகாரிகளை ஒருங்கிணைப்பதே இந்த மாநாட்டின் நோக்கம்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பூபேந்தர் யாதவ், "இந்திய கடற்கரை, நாட்டிற்கு அபரிமிதமான கேந்திர, பொருளாதார, சமூக முக்கியத்துவத்தை அளிக்கிறது. நமது கடலோரப் பகுதிகளில் 17,000-க்கும் மேற்பட்ட தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு ஆதரவான பன்முகத்தன்மை வாய்ந்த சுற்றுச்சூழல் அமைப்புகள் இருக்கின்றன. பருவநிலை மாறிவரும் சூழலில், கடற்கரை பகுதிகளில் வசிக்கும் மக்களின் நெகிழ்தன்மையை கட்டமைப்பது மிகவும் அவசியம்” என்று தெரிந்தார்.

இந்தியாவின் கடலோர சமூகங்களின் பருவநிலை நெகழ்த்தன்மையை மேம்படுத்துதல் என்ற பசுமை பருவநிலை நிதியத்தின் ஆதரவு திட்டத்தால் நடத்தப்படும் இந்த மாநாட்டு நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT