எழும்பூரில் உள்ள குடியிருப்பில் பிடிபட்ட 19 நல்ல பாம்பு குட்டிகள்.

 
சுற்றுச்சூழல்

எத்திராஜ் கல்லூரி அருகேயுள்ள குடியிருப்பில் ஒரே இடத்தில் 19 நல்ல பாம்பு குட்டிகள் பிடிபட்டன

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை எழும்​பூரில் உள்ள எத்​தி​ராஜ் மகளிர் கல்​லூரி அருகே குடி​யிருப்பு ஒன்று உள்​ளது. அந்த குடி​யிருப்​பின் பின்​புறம் பயன்​படுத்​தப்​ப​டா​மல் கிடந்த பகு​தி​யில், வீட்​டின் உரிமை​யாளர் நேற்று முன்​தினம் மதி​யம் சில முட்​டைகளை பார்த்​தார்.

அவை பாம்பு முட்​டைகளாக இருக்​கலாம் என சந்​தேகமடைந்த அவர், உடனடி​யாக வனத்​துறை​யினருக்கு தகவல் தெரி​வித்​தார். இதையடுத்து கிண்டி வனத்​துறை​யினர் அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்​தனர். அப்​போது, அவை நல்ல பாம்​பின் முட்​டைகள் என்​பது தெரிய​வந்​தது.

தொடர்ந்து அந்த பகு​தி​யில் சோதனை நடத்​தி​ய​போது, தரைக்கு அடி​யில் 39 நல்ல பாம்பு முட்​டைகள் பொரிந்​து, அவற்​றில் இருந்து குட்​டிகள் வெளி​யேறி​யிருந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது.

முட்​டைகள் பொரிந்து ஓரிரு நாட்​களே ஆகி​யிருக்​கலாம் என்​ப​தால், பாம்பு குட்​டிகள் அரு​கில் பதுங்​கி​யிருக்​கலாம் என வனத்​துறை​யினர் கரு​தினர். இதையடுத்து கான்​கிரீட் பிளவு​கள் மற்​றும் பயன்​படுத்​தப்​ப​டாத பகு​தி​களை தோண்​டி, சுமார் 4 மணி நேரம் தீவிர​மாக தேடினர்.

அப்​போது, மறை​விடங்​களில் இருந்து ஒன்​றன்​பின் ஒன்​றாக 19 நல்ல பாம்பு குட்​டிகள் சிக்​கின. அவற்றை வனத்​துறை​யினர் பத்​திர​மாக மீட்​டனர். பின்​னர் அந்த பாம்பு குட்​டிகள் செங்​கல்​பட்டு வனப்​பகு​தி​யில் பாது​காப்​பாக விடப்​பட்​டன.

39 முட்​டைகளில் இருந்து 19 பாம்பு குட்​டிகள் மட்​டுமே மீட்​கப்​பட்​டுள்ள நிலை​யில், மீத​முள்ள 20 குட்​டிகள் வீட்​டின் தரைக்கு அடி​யிலோ அல்​லது அரு​கில் உள்ள பயன்​படுத்​தப்​ப​டாத பகு​தி​களிலோ பதுங்​கி​யிருக்​கலாம் என்று வனத்​துறை​யினர் சந்​தேகிக்​கின்​றனர்.

இதையடுத்து நேற்று மீண்​டும் தேடு​தல் வேட்டை நடை​பெற்​றது. ஆனால், பாம்பு குட்​டிகள் எது​வும் பிடிபட​வில்​லை. இதே குடி​யிருப்​பில் சுமார் 10 நாட்​களுக்கு முன்​பு, பெரிய அளவி​லான பெண் நல்ல பாம்பு ஒன்று வனத்​துறை​யின​ரால் மீட்​கப்​பட்​டது.

தற்​போது மீட்​கப்​பட்​டுள்ள பாம்பு குட்​டிகள், அன்று பிடிபட்ட பெண் நல்ல பாம்​பின் குட்​டிகளாக இருக்​கலாம் என வனத்​துறை​யினர் தெரி​வித்​துள்​ளனர். மீதம் உள்ள பாம்பு குட்​டிகளை வனத்​துறை​யினர்​ தொடர்ந்​து தேடி வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT