சுற்றுச்சூழல்

நீரைவிட அவசியம்  நீர் மேலாண்மை

செய்திப்பிரிவு

விவசாயப் பிரச்சினைகளைக்  குறித்த ஒரு கருத்தரங்கம் சென்னை பெருங்குடியில் தொலைத்தொடர்புத் துறையினருக்கான சங்கம் (UNION  OF  IT AND ITES) சார்பாக நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பத்திரிகையாளரும் சூழலியல் எழுத்தாளருமான பி.சாய்நாத்தும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த கோபிநாத்தும் கலந்துகொண்டனர்.

கோபிநாத் சிறு விவசாயக் கடன்கள், கிசான் கார்டு ஆகியவை குறித்த முக்கியத்துவத்தைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார். அது பெண்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் வெளிப்படுத்தினார். அத்துடன் எம்.எஸ்.சுவாமிநாதன் திட்டத்தைப் பற்றி விரிவாக உரையாற்றினார்.

இவரைத் தொடர்ந்து பேசிய சாய்நாத், இந்திய விவசாயம் சந்தித்துவரும் நெருக்கடிகளைப் பற்றிப் பேசினார். இந்தியா தனது உள்நாட்டு உற்பத்தியையும் சந்தையையும் விரிவாக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசினார். விவசாயிகள் சந்திக்கும் நீர் நெருக்கடிக்குக் காரணம் நீர் பற்றக்குறை என்பதைவிடத் தவறான நீர் மேலாண்மைத் திட்டங்கள்தாம் எனத் திடமான தனது கருத்தை முன்வைத்தார்.

மேலும், சென்னையில் ஒரு நாளில் ஒரு நபருக்கான தண்ணீர்த் தேவை 500 லிட்டர் என்பதாக இருக்கிறது. அது புதுக்கோட்டையில் 600 லிட்டராக இருக்கிறது. இது ஏன் என்பது ஆய்வுசெய்யப்பட வேண்டியது எனத் தெரிவித்தார். சிறு, குறு, நடுத்தர விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு தன் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

- தொகுப்பு: ராஜலட்சுமி

SCROLL FOR NEXT