டேராடூன்: உத்தராகண்டின் வளமான இமயமலை பல்லுயிர், சுற்றுச்சூழல் சமநிலையை பராமரித்தல், நீர் வளங்களை பாதுகாத்தல், உள்ளூர் மற்றும் பிராந்திய காலநிலையை ஒழுங்கமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த நிலையில், மிஷன் லைப் திட்டத்துக்கு இணங்க ரெக்கிட் ஆதரவுடன் டெட்டால் காலநிலை நெகிழ்வுதிறன் கொண்ட பள்ளிகள் (டிசிஆர்எஸ்) திட்டம், “உத்தராகண்ட் பல்லுயிர் கண்டுபிடிப்பு தொகுப்பை (Kit)’’ அறிமுகப்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு கல்வி கற்பதையும், அவர்களை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்ட இந்த தொகுப்பு, மாநிலத்தின் தனித்துவமான பல்லுயிர் பெருக்கத்தை மையமாகக் கொண்டது.
உத்தராகண்டின் இயற்கை பாரம்பரியத்தை கொண்டாடும் அதே வேளையில் பாதுகாப்பு மற்றும் நெகிழ்வுதன்மை பற்றிய ஆழமான புரிதலை அது வளர்க்கிறது.
இந்த தொகுப்பு, உத்தராகண்டின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை ஆராய்வதை ஈடுபாட்டுடன் ஊக்குவிக்கக்கூடிய கலை மற்றும் கல்வி கருவிகளை வழங்குகிறது. காலநிலை அகராதி, உத்தராகண்ட் வரைபட ஜிக்சா புதிர், பல்லுயிர் அட்டைகள், இயற்கை இதழ், படைப்புக்கான எழுதுபொருள் (பின்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் புக்மார்க்குகள்) மற்றும் 7 மிஷன் லைப் கருப்பொருள்கள் பற்றிய சிறிய புத்தகம் போன்றவை இந்த கற்றல் பொருட்கள் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
காலநிலை அகராதி, சுகாதாரம் தொடர்பான முக்கிய சொற்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. மாணவர்களின் வாழ்க்கை அனுபவங்களில் அறிவியல் அறிவை அடித்தளமாகக் கொண்டு, விமர்சன சிந்தனை, சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் நீண்டகால காலநிலை விழிப்புணர்வை மாணவர்களிடம் வளர்க்க காலநிலை அகராதி உதவுவதாக ரெக்கிட் தெரிவித்துள்ளது.