சுற்றுச்சூழல்

மேட்டுப்பாளையம் அருகே யானை தாக்கியதில் மீனவர் உயிரிழப்பு

இல.ராஜகோபால்

கோவை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள பவானிசாகர் நீர்தேக்க பகுதி அருகே காட்டு யானை தாக்கியதில் மீனவர் உயிரிழந்தார்.

சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் என்ற செல்லத்துரை (49). மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று இரவு பவானிசாகர் நீர்த்தேக்க பகுதியில் உள்ள மயில் மொக்கை என்னும் இடத்தில் மீன் பிடிப்பதற்காக வலை விரித்து காத்திருந்தார். அப்போது, அசதியில் தூங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

அங்கு வந்த ஒற்றை யானை செல்லத்துரையின் தலையை காலால் மிதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறித்து சம்பவ இடத்திற்கு சென்ற சிறுமுகை வனச்சரகர் மனோஜ் தலைமையிலான வனத்துறையினர் ஜார்ஜின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT